உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பன்னீருக்கு இடமில்லை: பா.ஜ.,வும் கைவிரித்தது

பன்னீருக்கு இடமில்லை: பா.ஜ.,வும் கைவிரித்தது

அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்ததால், அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.

வலியுத்தல்

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு உருவாக்கி, சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tnvil9p9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி கடந்த ஏப்ரல் 11ல் உருவானது. 'தி.மு.க.,வை வீழ்த்த, அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும். 'சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் அல்லது அவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டும்' என பழனிசாமி யிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி வந்தார்.இரண்டையும் ஏற்க, பழனிசாமி உறுதியாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான், கூட்டணி அறிவிப்புக்காக சென்னை வந்த அமித் ஷாவை சந்திக்க, பன்னீர்செல்வம், தினகரனுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.பன்னீர்செல்வம், தினகரனை விட அ.தி.மு.க., கூட்டணியே முக்கியம் என அமித் ஷா முடிவெடுத்து விட்டதாகவும், அ.தி.மு.க., உள்விவகாரத்தில் ஒரு எல்லையை மீறி தலையிட முடியாது என அவர் கைவிரித்து விட்டதாகவும், தமிழக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்து என்ன?

இதனால், பா.ஜ.,வை நம்பியிருந்த பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், அடுத்து என்ன முடிவெடுக்கப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையில், தன் ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க., என்ற கட்சியை தனதாக்கி, அக்கட்சி வாயிலாக அரசியல் செய்ய வேண்டும் என பன்னீர்செல்வத்தை, அவருடைய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் தகவல் வெளியாகி இருக்கிறது. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RRR
மே 06, 2025 18:45

எட்டப்பபாடியுடன் சேர்ந்து னங்கெட்ட கூட்டணி அமைத்து பாஜக தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டதற்கு பதிலாக அமமுக மற்றும் பன்னீருடன் சேர்ந்து கொஞ்சம் மானமுள்ள ஒரு கூட்டணி அமைத்திருக்கலாம்...


Chandrasekaran Balasubramaniam
மே 04, 2025 07:54

அதிமுக கட்சியே நாசமா போனது. இவன் ஜெ க்கு பெரிய துரோகம் செய்துவிட்டான்.


visu
மே 04, 2025 07:33

பழனிசாமி ஈகோ பிரச்சினை தென்தமிழக ஓட்டுக்கள் சிதறும் சசிகலா OPS தினகரன் அனைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் OPS TTV செல்வாக்கு உள்ள தனி நபர்கள்


Udhaya Sankar
மே 04, 2025 00:29

மணல் கொள்ளை உள்பட ஜெயலலிதா இருக்கும் போது 4 இலக்காக்களை கையில் வைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு கொள்ளை அடித்த பணம் பல ஆயிரம் கோடிகள் எல்லாம் இருக்கு அப்பறம் என்ன?


M.Sam
மே 03, 2025 21:06

மிக பெரிய தவறு இது . இதன் பாதிப்பு வரும் தேர்தலில் புரியும்


என்றும் இந்தியன்
மே 03, 2025 17:39

ஒரு காலத்தில் டாஸ்மாக்கினாட்டில் முதன் மந்திரியாக இருந்தவருக்கு இந்த கதியா


thehindu
மே 03, 2025 16:52

கொள்கை கோட்பாடுகள் எதுவுமில்லாத கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள கட்சி . இன்று இல்லை என்பார்கள். நாளை எங்களை பிரிக்கமுடியாது என்பார்கள் . ..


thehindu
மே 03, 2025 16:51

இப்படி தினமும் கதைகள் பல கூறி மக்களை ஏமாற்றவேண்டாம்


Ethiraj
மே 03, 2025 15:31

Paneer can retire from politics


S.Martin Manoj
மே 03, 2025 14:33

பண்ணீருக்கு மட்டுமல்ல பழனிக்கும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போதே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை