உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு; மீண்டும் சொல்கிறார் திருமாவளவன்

கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு; மீண்டும் சொல்கிறார் திருமாவளவன்

காரைக்குடி: “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்பட வேண்டும். இதுதான் இன்றைக்கும் எங்கள் நிலைப்பாடு,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தி.மு.க.,விற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவாகவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடிக்கடி தமிழகம் வந்து கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார்.

கூடுதல் சீட்

தற்போது அ.தி.மு.க., மட்டுமே பா.ஜ., கூட்டணியில் உள்ளது. மற்ற கட்சிகள் யாரும் கூட்டணிக்கு வர, இதுவரை சம்மதிக்கவில்லை. இன்றளவில் தி.மு.க., கூட்டணி தான், தமிழகத்தில் வலுவாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கூட்டணியில் கூடுதல் சீட் கேட்கிறோம். கூட்டணி பேச்சு முடிவின்படி, அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளை ஏற்கிறோம்.தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால், அக்கட்சியினருக்கு வருத்தம் உள்ளது. அதையடுத்து, அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்லுமா என்பது தெரியவில்லை. அக்கட்சி தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். இதற்காக, அக்கட்சி தி.மு.க., கூட்டணிக்கு வரும் என சொல்ல முடியாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்பட வேண்டும். இதுதான் இன்றைக்கும் எங்கள் நிலைப்பாடு. போக்குவரத்துக் கழகங்களின் பெயரில் இருந்து, 'தமிழ்நாடு' என்பதை எடுத்ததில், எந்த உள்நோக்கமும் இல்லை.

உட்கட்சி விவகாரம்

பா.ம.க.,வில் நடப்பது குடும்ப, உட்கட்சி விவகாரம். இதில் மற்றவர்கள் தலையிடுவது தேவையில்லாதது; கவலையளிக்கிறது.வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், பஹல்காம் சம்பவத்தில் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதல் குறித்து எல்லா கட்சியினரும் பேசுவர். மத்திய அரசு அதற்கு உரிய பதிலளிக்க வேண்டும்.இந்தியாவிற்கு என தனியாக தேசிய மொழி இல்லை. இருப்பினும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இருக்கிறோம். இதற்கு, நம் அரசியலமைப்பு சட்டமே காரணம். பா.ஜ., அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். மணிப்பூரில் நடக்கும் வன்முறை, அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு பா.ஜ., தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Matt P
ஜூன் 25, 2025 11:15

துணை முதலவர் பதவி கொடுத்திர போறாங்க.


Matt P
ஜூன் 25, 2025 11:13

தேசிய மொழி இந்தி இல்லை இல்லை என்கிறார்கள். பாராளுமன்றத்தில் அந்த மொழியை தான் அதிகமாக பேசுகிறார்கள். நாணயங்களில் இந்தி, ரயில் நிலையங்களில். தேர்வு கேள்வி தாள்களில் இந்தி அல்லது இங்கிலீஷு...சொல்லிkkita வேண்டியது தான் இந்தி தேசிய மொழி இல்லை என்று. இந்தி தெரியாததால் தான் தமிழ்நாட்டான் பிரதமர் ஆக முடியவில்லயென்றும் சொல்கிறார்கள். எழுதப்படாத சட்டம் மாதிரி அதிகார்பூரவாமாக அறிவிக்கப்படாமல் இந்தி தான் தேசிய மொழி இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள மத்திய அலுவலங்களில் கூட இந்தியில் தானே விளமபரப்பலகைகள் . வைத்திருக்குகிறார்கள்.


krishna
ஜூன் 09, 2025 17:07

IVARU PERIYA APPA TAKKAR THERDHAL PECHU VAARTHAIKKU UDANJA PLASTIC CHAIRAAVADHU PODUVAANGALA PAARUNGA NEENGA UKKARA. IDHELLAM ORU KATCHI.IDHUKKU THONDARGAL VERA.ASINGAM


Shunmugham Selavali
ஜூன் 09, 2025 14:23

கூட்டணி ஆட்சி இல்லையென்றால் தேர்தலில் கூட்டணி கிடையாது என்று இவரால் கூறமுடியுமா?


Haja Kuthubdeen
ஜூன் 09, 2025 14:14

தேர்தல் அரசியல்கூட்டணி என்று உருட்டாமல் தெளிவா உங்க நிலைப்பாட்டை சொல்லுங்க


theruvasagan
ஜூன் 09, 2025 10:59

ஒருத்தர் இப்படித்தான் ஊழல் ஆட்சி மேல் ஆவேசம் வந்து டிவியை போட்டு உடைத்துவிட்டு யாரைச் குற்றம் சொன்னாரோ இப்போது அவர்கள் வீட்டு வாசலை கூட்டிப் பெருக்கி கழுவி அவர்கள் போடுகிற பிச்சையில் வயிற்றைக் கழுவிக் கொள்ளும் இழிநிலைக்கு தன்னை எந்தவிதமான கூச்ச நாச்சமும் இன்றி தயார்படுத்திக் கொண்டுவிட்டார். பஞ்சத்தில் ஆண்டிக்கே அந்த கதை என்றால் பரம்பரை ஆண்டிக்கு அதைவிட இன்னும் கீழ்த்தரமான நிலைதான் வரப்போகிறது என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதற்கும் அசராமல் அடிமை சேவகம் செய்ய எள்ளளவும் தயங்காத மானஸ்தரின் சரித்திரமே அதற்கு சாட்சி.


Minimole P C
ஜூன் 11, 2025 08:03

very good


Manaimaran
ஜூன் 09, 2025 10:46

இவனுக்கு : முத்திப் போச்சு


Santhakumar Srinivasalu
ஜூன் 09, 2025 10:43

இதே கனவில் இருங்க! இருக்கரதும் போய்விடும்!


Rajarajan
ஜூன் 09, 2025 10:42

அங்க என்னப்பா சத்தம் ? சும்மா பேசிகிட்டு இருந்தேன் மாமா.


திருட்டு திராவிடன்
ஜூன் 09, 2025 10:41

இவனைப் போன்ற ஒரு கூறுகெட்ட அயோக்கியனை எங்கும் பார்க்க முடியாது. கூட்டணி ஆட்சி தான் என்ற நிலையில் இருந்து மாறாமல் இவ்வளவு காலம் கூட்டணி ஆட்சியை செய்தான் இந்த அயோக்கியன். தன் சொந்த உறவுகளை படுகுழியில் தள்ளி அவர்கள் ரத்தத்தில் வாழும் இவனை என்னவென்று கூறுவது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை