உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமாவளவன் கனவுகள் நிறைவேறும்; ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை என ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

திருமாவளவன் கனவுகள் நிறைவேறும்; ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை என ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டசபை தேர்தலில் நிறைவேற்றப்படும். பிரச்னை வருவதை எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால் தான் தீர்வு கிடைக்கும்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

மதுரையில் திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வலதுசாரி, இடதுசாரி என பேசக் கூடியவர்கள் கூட ஆணவ படுகொலையை பற்றி பேச மறுப்பது இந்த சமூகத்தின் துர்பாக்கியம். தலித் மக்கள், சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் எதற்கு. ஊழல் செய்வதற்காக இல்லை. கோயிலில் எல்லோரும் சமம் என்று செல்லும்போது தலித் மக்கள் இன்றைக்கும் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அங்கு தீண்டாமை இருக்கிறது.தலித் மக்கள் கோபத்தை சொல்லும்போது வன்முறையாளர்கள். சிறுபான்மையின மக்கள் தங்களது உரிமையை கேட்கும்போது தீவிரவாதிகள். உரிமையை கேட்டால் சங்கி என்கிறார்கள். சேரிகளுக்கு என பட்ஜெட்டில் தனி ஒதுக்கீடு வேண்டும். இப்போது நிறைய பேர் 'டிவி'யில் என் ஜாதி பெயரை சொல்லி பேசுகிறார்கள். அவர்கள் முட்டாள்கள், பைத்தியக்காரர்கள். எனக்கே என் ஜாதி தெரியாது. அதனால்தான் திருமாவளவனுடன் இருக்கிறேன். எனக்கு பதவி வேண்டும் என்றால் பல பதவி உள்ளது. இந்த ஜாதி பெயரை சொல்லி கூப்பிடுவது யு டியூபில் கத்துவது இதையெல்லாம் 15 வயதில் அம்பேத்கார் புத்தகத்தை படிக்கும் போதே பார்த்துவிட்டோம். பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்ளலாம். பிரச்னை வருவதை தான் எதிர்பார்க்கிறோம். பிரச்னை வந்தால் தான் தீர்வு கிடைக்கும். அமைதியா ரொம்ப வருஷம் இருந்துட்டோம்.கொள்கை கூட்டணி, அதிகார கூட்டணி என்று சொல்வார்கள். அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள். கொள்கை கூட்டணி என்பது அதிகார கூட்டணி அல்ல. ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை. எங்களுக்கான அரசியல், எங்களுக்கான பிரசாரத்தை உருவாக்க தெரியும். திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Balakrishnan karuppannan
நவ 26, 2024 07:14

கொள்கை வேண்டும்... நிச்சயமா கனவிலும் நடக்காது.....


bala krishnan
நவ 22, 2024 07:58

ஒன்று நிச்சயம் உன்னால் நடக்கப்போகிறது..... அது திருமாவை அரசியல் அனாதையாக ஆக்குவது...


prakash m
நவ 22, 2024 00:13

100% Sure..COME IN TN CM....


prakash m
நவ 22, 2024 00:10

100% TRUE..DR.THIRUMA AVL HAS REALITY OF GREAT POLITICAL LEADER OF INDIA...SURE COME IN TN CM...COMING SOON.....SURE


Ramesh Sargam
நவ 21, 2024 22:30

ஒரு தமிழ் படத்தில் லிவிங்ஸ்டனை பார்த்து கும்பலில் ஒருத்தன் அடுத்த ஜனாதிபதி வாழ்க என்று கூவுவான். அதுபோல இருக்கிறது இந்த அர்ஜுன் ஆவேச பேச்சு. மொதல்ல ஒரு நாலு அல்லது ஐந்து தொகுதிகளில் உங்கள் கட்சி ஜெயிக்குதா பாருங்கள். பிறகு உங்கள் கனவு நிறைவேறுதா பார்க்கலாம்.


rameshkumar natarajan
நவ 21, 2024 15:43

VCK has 4 MLAs and 2 MPs. By doing all these this guy is ensuring no representation in assembly and parliament. VCK members dont support this view. If thiruma is agreeing what this person is saying, which means thats end of Thiruma. very sorry .


SUBRAMANIAN P
நவ 21, 2024 14:12

கொஞ்சம் சூடு சொரணை உள்ள ஒருதராவது இருக்காரே வி.சி.கவுல. திரு. ஆதவ் உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். போதாது பெர்போர்மன்ஸ். நிறைய நிறைய நீங்களாவது தட்டி எழுப்புங்க உங்க கட்சி தொண்டர்களோட உணர்ச்சியை. பார்த்து.. ரொம்ப பேசிறாதிங்க.. அப்புறம் அண்ணன் கட்சியைவிட்டே கல்தா குடுத்துறப்போறாரு.


TSelva
நவ 21, 2024 12:20

கருணாநிதி குடும்பத்தில் பிறந்து விட்டால் முதல் மந்திரி பதவி நிச்சயம்.


ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 21, 2024 13:07

திமுக மைண்ட் வாய்ஸ்: அடேய் சிறுத்தைகளா ரொம்ப ஓவரா போறீங்க? நாங்க ஓரளவுக்குதான் தாங்க முடியும் எங்க கட்சி வெட்டி வக்கீல் R.S.பாரதி சும்மாதான் ஒக்காந்துகிட்டு இருக்காரு அவர லேசா கிள்ளி விட்டோம்னு வை அப்றம் நீங்க தாங்க மாட்டீங்க ஜாக்கிரதை!


Shekar
நவ 21, 2024 12:18

கைப்புள்ள பாவம்யா, உடம்பு தாங்காது.


sankar
நவ 21, 2024 11:16

திருமாவளவனுடைய கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும்- நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் அம்பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை