உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பா; கட்டணம் கணக்கீட்டில் புதிய நடைமுறை

ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பா; கட்டணம் கணக்கீட்டில் புதிய நடைமுறை

திருப்பூர்: தமிழக மின்வாரியம், வருவாய் இழப்புகளை தடுத்து, வருவாயை பெருக்க, ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.இதன்படி, ஒரு வீட்டில், இரு மின் இணைப்பு இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாக கருதி, மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில், 'சாப்ட்வேர்' மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: வீட்டு இணைப்புக்கு, ஒவ்வொரு பில் கணக்கீட்டிலும், 100 யூனிட் இலவசமாக கிடைக்கிறது. ஒரு வீட்டுக்கு, இரு இணைப்பு பெற்றிருந்தால், தலா, 100 யூனிட் இலவசமாக பெறுகின்றனர். அதேபோல், வர்த்தகத்துக்கு இரு இணைப்பு இருக்கும் போது, மின் கட்டணம் குறைவாக வரும்.ரகசிய கணக்கெடுப்பில், இத்தகைய இணைப்புகள் கண்டறியப்பட்டு, தகுந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து, மின் கட்டணம் கணக்கிடப்படும். வீடுகளுக்கு, 100 யூனிட் கழித்து, மற்ற யூனிட்டுகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்.கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதனால், நீண்டகால வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Radha Krishnan
ஆக 24, 2024 02:12

உங்க சீர்திருத்தம் எல்லாம் மக்கள் உயிரை வாங்குறதுக்குத்தான் வருது மின்வாரிய அலுவலகத்துல லஞ்சம் லஞ்சம் லஞ்சம் ஒரு சிங்கிள் பேஸ் இணைப்பு கொடுக்குறதுக்கு 1000 மீட்டர் ஷிப்ட் பண்ணனும்னா அதுக்கு 1000 அப்டி வயர்மேன் வாங்குறாரு ஏ இ யில இருந்து ஜெ இ வரைக்கும் லஞ்சம் அது மொதல்ல சரி பண்ணுங்க


Bakthavachalam Srinivasan
ஆக 22, 2024 03:14

தமிழக அரசு 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்தாலே போதும் எல்லாம் சரியாகி விடும். பெரும்பாலான பொதுமக்கள் யாரும் மாதம் 50யூனிட் மின்சாரத்தை எதிர்பார்க்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில் வேண்டுமானால் புதிய மாற்றங்கள் செய்வது நியாயம். ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு புதிய விதிகளை நடைமுறை படுத்துவது எப்படி நியாயமாக இருக்க முடியும்.உண்மையிலேயே முறையாக இல்லாத விதிகள் மீறிய மின் இணைப்புகளை கண்டறிந்து விதிப்படி திருத்தி அமைப்பது தான் சரியாக இருக்க முடியும்.


RAM
ஆக 21, 2024 22:48

ஐயா, மின் உபயோகம் கணக்கீடு செய்யும் பொழுது, அடுக்கு அமைப்பு Slab tem முறையை தவிர்த்து வீடுகளுக்கு ஒரே விதமான உபயோக கட்டணத்தை செயல்படுத்தினால், முறைகேடுகள் செய்வதை தடுக்கலாம். இலவச மின்சாரம் என்பது தேவையற்றது. இது ஒரு கண் துடைப்பு ஆகும்.


Ravi chandran
ஆக 21, 2024 22:36

6000 கோடி கரியில் ஊழல் பண்ணி இந்த அரசியல் வியாதிகள் கொள்ளை அடிக்க நாம் நமது உயிரை கொடுக்க வேண்டுமா?


Baladhandayutham Eswari
ஆக 21, 2024 22:17

இலவசமே வேண்டாம் முறையாக லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சியை நடைமுறைப்படுத்துங்கள்.முறையான அதிகாரிகள் திட்டமிடுதல் நஷ்டத்தை தவிர்த்து அரசு லாபத்தில் இயங்கும் அனைத்து இடத்திலும்...


vsathavan
ஆக 21, 2024 21:45

கொரனா காலம் முதல் அதிகபடியாக வீடு இணைப்புகள் கமர்சியல் மாறி உள்ளது.புகார்கள் கண்துடைப்பாகவிசாரணை மின்தராசுவிற்பனை & பால் பூத் விற்பனை மையங்கள்முறை பில் வுடன் விற்பனை செய்தால் மின் திருட்டுகள்தடுக்கலாம்...


vsathavan
ஆக 21, 2024 21:39

இராசபாளையம் பகுதியில் அதிக அளவில் மின்திருட்டு டெக்னிகல் லாக சோலார் பேனல் பெயர்க்கு வைத்து திருட்டு 30 ஆண்டுகள தொடர்கிறது சிலிப்பர் செல் உதவியுடன்


Kumar
ஆக 21, 2024 19:51

மின் வாரியத்தில் உள்ள லஞ்சத்தையும் ஒழிக்கலாம். லஞ்சம் இன்றி ஒரு வேலையும் நடப்பதில்லை


Sundarraj
ஆக 21, 2024 19:03

ஆம் பல வீடிகளில் 500யூனிட்டை தடுக்க இரண்டு மூன்று லைன் வைத்துள்ளனர் இரண்டு லைனுக்கு 100ருபாய் சலுகை போக கணக்கு பார்த்தால் ருபாய் 3000 வரும் ஆனால் செலுத்தும் தொகை ரூ.1200,மற்றும் ரூ.1300மட்டுமே.அரசுக்கு ரூ.1500 வரை நஷ்டமே.இதை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கும்


manivannan
ஆக 22, 2024 19:28

அரசுக்கு வருமானம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் நிலக்கரி கொள்முதலில் பத்தாயிரம் கோடி இருபது ஆயிரம் கோடி ஊழல் மின்சார வாரியத்திற்கு வாங்கும் உதிரி பாகங்கள் பல ஆயிரம் கோடி ஊழல் இப்படி பல ஆயிரம் கோடி ஊழல் நடக்கின்றது அதை முதலில் தட்டிக் கேளுங்கள்.....


Bhaskaran
ஆக 21, 2024 18:25

இனிமேல் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி மின்கட்டணம் என்று கணக்கீடு செய்தால் வாரியம் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டும் ஒரு வீட்டுக்கு குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் மின்கட்டணம் கிடைக்கும் உடனடியாக அமல் செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ