உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தியாகராஜன் கூட்டத்தை புறக்கணித்த மா.செ.,வால் சர்ச்சை: மதுரை தி.மு.க.,வில் முற்றுகிறது மோதல்

தியாகராஜன் கூட்டத்தை புறக்கணித்த மா.செ.,வால் சர்ச்சை: மதுரை தி.மு.க.,வில் முற்றுகிறது மோதல்

மதுரை : மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மதுரையில், அமைச்சர் தியாகராஜன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை சம்பந்தப்பட்ட தி.மு.க., நகர் செயலர் தளபதி புறக்கணித்ததால், மதுரை மாநகர உட்கட்சி மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.மதுரையில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தளபதி ஆகியோர் தனித்தனி அதிகார மையங்களாக உள்ளனர். புறநகர் பகுதியான தெற்கு, வடக்கு தி.மு.க., ஆகியவை மூர்த்தி கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், மாநகர் பகுதியில் கோலோச்சுவதில் அமைச்சர் தியாகராஜன், நகர் செயலர் தளபதிக்கு இடையே மறைமுக பனிப்போர் நிலவுகிறது.மாநகராட்சி மேயர், ஒரு மண்டல தலைவர், அமைச்சர் தொகுதி சார்ந்த மத்திய தொகுதி நிர்வாகிகள் தியாகராஜன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கட்சி நிர்வாகிகள், பெரும்பாலான கவுன்சிலர்கள், புதிய நிர்வாகிகள் நியமனம் போன்றவை தளபதி கட்டுப்பாட்டில் உள்ளன.இதற்கிடையே நான்கு சட்டசபை தொகுதிகள் கொண்ட நகர் தி.மு.க.,வை இரண்டாக பிரிக்க வேண்டும் என, அமைச்சர் தியாகராஜன் தீவிரமாக முயற்சிக்கிறார். அவ்வாறு நடந்தால் தனக்கான முக்கியத்துவம் பறிபோய்விடும் என தியாகராஜனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, கட்சிக்குள் தனக்கான ஆதரவு நிர்வாகிகளை வலுப்படுத்தும் பணியில் தளபதி ஈடுபட்டுள்ளார்.

புறக்கணிப்பு

இந்நிலையில், மதுரையில் உள்ள அமைச்சர் தியாகராஜன் வீட்டிற்கு முதல்வர் மருமகன் சபரீசன் கடந்த வாரம் வந்தபோது, நகர் செயலர் வழியாக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.இதற்கிடையே, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி, அனைத்து மாவட்டங்களிலும் பிப்., 9ல் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க., தலைமை உத்தரவிட்டது.மதுரை மாநகரில் அமைச்சர் தியாகராஜன், நகர் செயலர் தளபதி, சேலம் சுஜாதா பேசுவர் எனவும் தலைமை அறிவித்தது. ஆனால், சேலம் சுஜாதாவை தவிர்த்த தளபதி தரப்பு, கட்சியின் கொள்கை பரப்பு செயலர் லியோனியை பங்கேற்க வைத்தது. அதுதொடர்பாக வெளியான அழைப்பிதழில் நகர் செயலர் தளபதிக்கு பின், அமைச்சர் தியாகராஜன் பெயர் கடைசியாக இடம் பெற்றது.இதனால் அமைச்சர் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்து, கட்சித் தலைமையின் கவனத்திற்கு, இவ்விவகாரத்தைக் கொண்டு சென்றனர். தலைமையின் கண்டிப்புக்குப் பின் அமைச்சர் பெயர் முதலிடத்திலும், லியோனி, தளபதி பெயர்கள் அடுத்தடுத்தும் இடம்பெற்ற அழைப்பிதழ் வெளியானது. இந்நிலையில் தான், அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தை தளபதி புறக்கணித்தார். இதனால், கட்சி தலைமை அதிர்ச்சியில் உள்ளது.இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: மாவட்ட செயலர்தான் கூட்டத்தை நடத்த வேண்டும். பகுதிச் செயலர் தலைமை வகிக்க வேண்டும் என தலைமை வலியுறுத்தியது. ஆனால், மதுரையில் இரண்டும் நடக்கவில்லை. அமைச்சர் பங்கேற்றதால் கூட்டத்தை சிறப்பாக நடத்த நகர் தி.மு.க., திட்டமிடவில்லை.

முக்கியத்துவம்

அழைப்பிதழ், போஸ்டர்களில் சம்பந்தப்பட்ட பகுதிச் செயலர் பெயர் இடம் பெறவில்லை. அதேநேரம் அழைப்பிதழில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பல வட்டச் செயலர்கள் பங்கேற்கவில்லை.மேடையில் மூத்த நிர்வாகிகள் இருவர் வாக்குவாதம் செய்து மோதல் ஏற்படும் நிலையில், தொண்டர்கள் அமைதிப்படுத்தினர். அமைச்சர் - நகர் செயலருக்கு இடையேயான மோதலால், பட்ஜெட் கண்டன கூட்டம் சொதப்பலாக முடிந்தது. மொத்தத்தில், மதுரை தி.மு.க., இரு கூறாக பிளவுபட்டு நிற்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.தளபதி தரப்பினர் கூறுகையில், “மதுரை நகர் செயலர் தளபதிக்கு, திடீர் பல்வலி ஏற்பட்டதால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் அவர் ஏற்பாட்டில்தான் சிறப்பாக நடந்தது,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Muralidharan S
பிப் 10, 2025 18:13

ஆட்சிக்கு வந்து அமைச்சர் ஆனா புதிதில் தினம் முன்னூறு பேட்டி குடுத்து தூக்கி எல்லோரையும் சகட்டுமேனிக்கு பேசித்திரிந்த பீ.டீ.ஆர் பேச்சு சத்தத்தையே காணோம்.


Balakrishnan Prc
பிப் 10, 2025 14:00

மதுரை மாவட்டம் மேலே குறிப்பிட்ட மூன்று பேர் திமுகாவை மதுரையில் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு தலைமை அறிவிப்பு அதை முறையாக நடத்த வேண்டும் நடத்தும் மாவட்ட செயலாளர் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி.வடக்கு சட்ட மன்றம், மதுரை மாநகர் மாண்புமிகு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் மாநிலத்திற்கு பணியாற்றினாலும் தான் இருக்கும் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அவர்களுடன் கலந்து கழகம் கட்சி பொறுப்பு உள்ளவர்கள், பொதுமக்கள் குறை முறையிடுவோர் ஆளும் கட்சி பொறுப்பு உள்ளவர்களுக்கு தன்னை நாடி வருபவர்களுக்கு பணியாற்றி ஆளும் திமுக கட்சிக்கு நற்பெயர் ஏற்படும்.ஆனால் வாய்ப்பு பொறுப்பு பெற்ற பிறகு , ஆளும் கட்சியாக வேட்பாளராக வர கட்சிக்காரர்கள் முதல்வர் நமது கழக தலைவர் மு.ஸ்டாலின் அறிவுரை நாம் நமது கட்சி பத்தாண்டு எதிர்க்கட்சியாக பணியாற்றி கட்சி கழகம் மக்கள் காக்க திமுக தலைவர்கள் போராடி ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாலும் நீங்கள் யாவரும் உங்களது பணியைத் தான் பார்க்ரீங்க2016 தேர்தல் மதுரை மாவட்டம் தோல்வியுற்ற சட்ட மன்றம் என்ன பணி பொறுப்பு வகிக்கும் மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர்கள் நீங்கள் நாளைய திமுக மதுரை மாவட்டம்.நீங்ளே பாருங்க பேப்பர் யூடியூப் நம்முடைய செயல், நமது முதல்வர், நமது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நம்மை மதுரைன்னா ஒற்றுமை யாக முன்னின்று செயற்பட்டனர் என பெயரெடுக்க தலைவர் கலைஞர் வாழ்க.


கிஜன்
பிப் 10, 2025 06:47

சங்கிஸ் ... புருமூர்த்தியின் கூற்றுப்படி .... மூன்று அமைச்சர்களை திமுகவை விட்டு தூக்கிவிட வேண்டும் என குறியாக உள்ளனர் .... அவர்கள் எழுதுவதை பார்க்கும்போது அமைச்சர்கள் தியாகராசன் மற்றும் தங்கம் இருவர் என புரிகிறது ....யார் அந்த மூன்றாவது அமைச்சர் என புரியவில்லை .... பகல் கனவு காணலாம் .... இது போல உருட்டலாம் .... ஆனால் திமுக காரன் என்றும் திமுக காரனாகத்தான் இருப்பான் .... எம்ஜியார் அழைத்தே ... அருப்புக்கோட்டை தங்கப்பாண்டியன் மற்றும் பழனிவேல்ராசன் ஆகியோர் அதிமுக பக்கம் செல்லவில்லை .... இவ்வளவுக்கும் அழகிரி அந்த அளவுக்கு இருவரையும் எதிர்த்து அரசியல் பண்ணினார் ... கொள்கை என்றால் கொள்கை தான் ...


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 10, 2025 09:23

அறிவாலய அடிமையே திமுகவினருக்கு கொள்கையே கொள்ளை அடிப்பதுதான்..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 10, 2025 10:54

கொத்தடிமை கூற்றுப்படி....இப்பொழுது இருக்கும் திமுக மந்திரிகளில் 50% சதவிகிதம் பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான்....கொள்கையாவது புண்ணாக்காவது....திமுகவின் கொள்கையே பொய் சொல்வது, கொள்ளையடிப்பது, ரவுடியிஸம் இவைகள் தான்...!!!


ஆரூர் ரங்
பிப் 10, 2025 14:14

எழுத்துப்பிழை. அது கொள்கை அல்ல கொள்ளை மட்டுமே.


Muralidharan S
பிப் 10, 2025 18:20

எங்க தலைவனையே கணக்கு கேட்டு , வெளியேறி ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக என்பதாலும், எங்களுக்கு சரியான / உண்மையான நல்ல வரவு செலவு கணக்கு காட்ட மாட்டோம்.. காட்டவும் தெரியாது, எங்களை அப்படி வளர்க்கவில்லை ... என்பதாலும்.... - அப்படின்னு சொல்றதுதான் வெகு பொருத்தமாக இருக்கும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை