உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10 நாளில் வன்னியர் இட ஒதுக்கீடு; அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

10 நாளில் வன்னியர் இட ஒதுக்கீடு; அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 'தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, இனியும் கால நீட்டிப்பு வழங்காமல், அடுத்த 10 நாட்களில், வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைக்க, தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, வரும் 11ம் தேதியுடன் முடிகிறது. வெறும் மூன்று மாதங்கள் வழங்கப்பட்ட காலக்கெடு, 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டும் கூட, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, ஓர் அடியைக்கூட தி.மு.க., அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் எடுத்து வைக்கவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாசும், நானும் முதல்வர் ஸ்டாலினுக்கு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் பலனில்லை.இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க, தி.மு.க., அரசு மறுக்கிறது என்றால், அது வன்னியர்களுக்கு எதிராக எவ்வளவு வன்மங்களையும், வஞ்சனைகளையும் சுமந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.சமூக நீதிக்கு எதிரான இந்த பாவச் செயலுக்கு, தி.மு.க., அரசு பரிகாரம் தேடுவதற்கான தருணம் வந்து விட்டது.வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்கான ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை இனியும் நீட்டிக்கக்கூடாது. ஆணையத்திடமிருந்து அடுத்த 10 நாள்களுக்குள் பரிந்துரை அறிக்கையை அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kulandai kannan
ஜூலை 03, 2025 13:25

இட ஒதுக்கீட்டில் படித்த MBBS வேலையை என்றாவது பார்த்தாரா அன்புமணி?


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 10:57

நடுச்சாதி மக்கள் தீண்டாமையை முழுவதும் கைவிட்ட பிறகு சலுகை கேட்கலாம். அதுவரை SC ST ஒதுக்கீடு மட்டும் போதும்.


அரவழகன்
ஜூலை 03, 2025 09:54

முடியாது


SUBBU,MADURAI
ஜூலை 03, 2025 08:56

தமிழகத்தில் MBC என்று அழைக்கப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என தமிழக அரசால் அங்கீகரித்து வரையறுக்கப்பட்ட சமுதாயத்தினர்கள் கிட்டத்தட்ட 90 க்கும் ஜாதிகள் மேல் அதிகமாக இருக்கின்றனர் அவர்கள் அனைவருக்குமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசு வழங்கிய மொத்த இட ஒதுக்கீடு 20 சதவீதம் ஆகும். அப்படி அந்த ஒட்டு மொத்த சமுதாயத்தினருக்குமான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 10.5 சதவீதத்தை எடுத்து வன்னியர்களுக்கு கொடுத்து விட்டு மீதமிருக்கும் வெறும் 9.5 சதவீத இட ஒதுக்கீட்டை மற்ற சமுதாயத்தினர் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என வன்னியர்களின் ஓட்டுக்களை முழுமையாக பெறுவதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் இது மற்ற அனைத்து சமுதாய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது அந்தக் கோபம்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியின் தலைமையிலான அதிமுக தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விஷயம் திமுக அரசுக்கு தெரியாமலா இருக்கும்? அன்புமணி எதார்த்தத்தை புரிந்து கொண்டு பேச வேண்டும்.


RAM MADINA
ஜூலை 03, 2025 12:21

ஆனா 90 ஜாதில அந்த ஒரு ஜாதி ஓட மக்கள் தொகை எவ்வளவுன்னு கொஞ்சம் யோசிக்கணும் இல்ல.... மொத்த MBC ல 1000 துக்கு 800 பேர் அவங்க இருந்த உள் ஒதுக்கீடு கேட்பதில் என்ன தவறு ?


R SRINIVASAN
ஜூலை 03, 2025 07:10

வன்னியர்க்கு மாத்திரம் அதிக இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற பிற்பட்ட ஜாதியினர் என்ன செய்வார்கள். இந்த தருணத்தில் முன்னாள் பிரதம மந்திரி சந்திர சேகர் அவர்கள் கூறியதை நினைவு கொள்ளவேண்டும். அவர் இல்லாத வேலைக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேட்டார்


அப்பாவி
ஜூலை 03, 2025 06:25

உருப்படியா ஒண்ணும் யோசிக்க மாட்டாய்ங்க.


naranam
ஜூலை 03, 2025 06:01

ஆரம்பிச்சுட்டன் இவன்! அடுத்தது மரங்களை வெட்டுவது!