உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் வாசன் துாது: பா.ஜ., திட்டம்

மீண்டும் வாசன் துாது: பா.ஜ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் அரசியல் கூட்டணியை இறுதி செய்ய முடிவு செய்துள்ள பா.ஜ., தேசிய தலைமை, கடைசி முயற்சியாக மீண்டும் ஒரு முறை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் பேச, த.மா.கா., தலைவர் வாசனை துாது அனுப்ப திட்டமிட்டிருப்பதாக, தகவல்வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என விரும்பி, த.மா.கா., தலைவர் வாசன் இருமுறை பழனிசாமியைசந்தித்து பேசினார். அப்போது பேசப்பட்டவிபரங்களை, பா.ஜ., தேசிய தலைமையிடம் தெரிவிக்க, டில்லிசென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lfcd7tt0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியுஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதில், தமிழக அரசியல் நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பழனிசாமியிடம் தான் பேசியதை, வாசன் தெரிவித்துள்ளார்.பா.ஜ., ஆட்சிக்கு ராஜ்யசபாவில், அ.தி.மு.க., துணை நின்றது குறித்தும், பிரதமர் தயவினால், பழனிசாமி ஆட்சியில் நீடிக்க முடிந்தது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.'பீகாரில் நிதீஷ் குமார், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பி வந்தபோது, அவரை இயற்கை கூட்டணிஎன்கிறோம்.'அதேபோல், அ.தி.மு.க.,வும் நமக்குஇயற்கையான கூட்டணி. பா.ஜ.,வில் 80 சதவீதம் பேர் அ.தி.மு.க., கூட்டணி வேண்டும் என்றும், அ.தி.மு.க.,வில் 75 சதவீதம் பேர், பா.ஜ., கூட்டணி இருந்தால், தி.மு.க.,வை வீழ்த்தலாம் என்றும்கருதுகின்றனர்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நட்டா, சில விஷயங்களை வாசனிடம் தெரிவித்துள்ளார். அவர் அறிவுறுத்தலின் படி, வாசன் மீண்டும் பழனி சாமியை சந்தித்து பேசஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதேபோல், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலையை அறிந்து வர, மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்பவும், பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது.அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில்,பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசியதலைவர் நட்டா ஆகியோர் கூடி, கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.- புதுடில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை