உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.சி., மாவட்ட நிர்வாகம் கலைப்பு; 234 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு

வி.சி., மாவட்ட நிர்வாகம் கலைப்பு; 234 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 234 சட்டசபை தொகுதிகளிலும், மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளதால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் புதியதாக, 144 மாவட்ட செயலர்கள், மண்டல செயலர்கள், மண்டல துணை செயலர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலர்கள் உள்ள கட்சி இது தான்.இதற்கிடையில், தமிழக முதல்வர் வேட்பாளராக திருமாவளவனை அறிவித்து, தேர்தல் களம் காணும் வியூகத்தையும், வி.சி., நிர்வாகிகள் திரைமறைவில் செய்து வருகின்றனர்.'மாநிலத்தில் அதிகாரம், மத்தியில் அங்கீகாரம்' என்ற தேசிய அரசியலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். 'திருமாவளவனை முதல்வராக்குவது எங்கள் கனவு' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.இந்நிலையில், வி.சி., கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கை:

தமிழகம் முழுதும், 234 மாவட்ட செயலர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக அறிவிக்கப்படுவர்.தமிழகம் முழுதும் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளின் பதவிகளை ஆய்வு செய்து, தலைமைக்கு பரிந்துரை செய்ய, ஒரு மாவட்டத்திற்கு மூன்று முதல் ஐந்து பேர் குழு அமைக்கப்படும்.இந்தக் குழு ஆய்வு செய்து, ஒவ்வொரு பொறுப்புக்கும் மூன்று பெயர்களை தலைமைக்கு பரிந்துரை செய்யும். அப்படி பரிந்துரை செய்யப்படும் மூவரில் ஒருவர், ஒரு பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.இந்தக் குழு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு குழு அமைக்கப்படும். தமிழகத்தில் 234 மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட பின், ஒன்றிய, நகர நிர்வாகிகள் முழுமையாக அறிவிக்கப்படுவர். இப்பணிகளை மேற்கொள்ள, இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

nagendhiran
அக் 24, 2024 18:36

கட்டபஞ்சாயத்து செய்ய ஆட்கள் நியமனமா?


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 14:47

கட்சி பேரையும், விடுதலை சிறுத்தை கட்சி ங்கறதுக்கு பதிலா, "... கட்சி " என்று மாற்றிக் கொள்ளலாம்.


வைகுண்டேஸ்வரன்
அக் 24, 2024 14:45

இன துரோகி திருமா தனது கட்சியையே கலைத்து விட்டு, காசு குடுத்த பிஜேபி யில் ஐக்கியம் ஆயிடுவார். புரோக்கர் ஆதவ் அர்ஜுன் இந்த ஏற்பாட்டையும் பண்ணித் தருவார்.


krishna
அக் 24, 2024 15:13

EERA VENGAAYAM VAIKUNDESWARAN SUPER GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI. ENNAMAA KOVURAARU JUST 200 ROOVAA COOLIKKU.


krishna
அக் 24, 2024 13:47

VAAZHTHUKKAL.


விஜய்
அக் 24, 2024 12:17

தில் இருந்தா தனியா நின்னு பாரு டெபாசிட் கிடைக்காது


ராமகிருஷ்ணன்
அக் 24, 2024 10:56

முதல்வர் ஆவதற்கு முஷ்தீபு நடக்கிறது. அல்லது கட்சி பெரிதாக வளர்ந்து விட்டது என்று பில்டப் கொடுத்து சீட் பேரம் பேச உதவும்.


A Viswanathan
அக் 24, 2024 19:00

கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.ஏன் முதல்வரோடு நிறுத்தி விட்டார்.பிரதமராக கூட கனவு காணலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை