கட்ட பஞ்சாயத்தில் பணம் சம்பாதிக்கும் வி.சி.,
கட்ட பஞ்சாயத்தில் பணம் சம்பாதிக்கும் வி.சி., பட்டியலின மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு ஒதுக்கிய 30 ஆயிரம் கோடி ரூபாயை, தி.மு.க., அரசு, மற்ற திட்டங்களுக்கு செலவு செய்கிறது. நேரு, இந்திரா ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது கொடுத்த காங்கிரஸ், அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்கவில்லை. ஆனால், அம்பேத்கரை எதிர்த்து தேர்தல் களம் கண்ட அவரது உதவியாளருக்கு விருது கொடுத்தது. இப்படி அம்பேத்கரை அவமதித்த காங்., உடன் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. பட்டி யலின மக்களின் எதிரி வி.சி., கட்சி. கட்ட பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்க மட்டுமே இண்டி கூட்டணியில் வி.சி., இருக்கிறது. அந்த கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால், அவர்களது தாத்தா அம்பேத்கர் அல்ல; கருணாநிதி என முடிவு செய்யட்டும். தங்கள் ஆதாயத்துக்காக, பட்டியலின மக்களை வி.சி., தவறாக வழிநடத்தக் கூடாது. தமிழகத்தில் உள்ள 30 சதவீத பட்டியலின மக்களில், 25 சதவீதம் பேர் பா.ஜ., கூட்டணியை ஆதரிப்பர் . - வெ ங்கடேஷ் மவுரியா மாநில பார்வையாளர், பா.ஜ., - எஸ்.சி., அணி