பிரதமர் மோடி முன்னிலையில், பா.ஜ.,வில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலராகவும் விஜயதாரணி உள்ளார். இருப்பினும், சட்டசபை காங்கிரஸ் தலைவர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் போன்ற பதவிகள் தனக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்தி விஜயதாரணிக்கு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qh9hw0ic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என, சமீபத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரை சந்தித்து வலியுறுத்தினார்.'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களுக்கு, எம்.பி., தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இடைத்தேர்தலுக்கு செலவு செய்ய தி.மு.க., விரும்பவில்லை என்பதால் சீட் கிடையாது என, விஜயதாரணியிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.வரும் 25ம் தேதி, பல்லடத்தில் நடக்க உள்ள, தமிழக பா.ஜ., அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி முன்னிலையில், பா.ஜ., வில் விஜயதாரணி இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து பேச நேற்று முன்தினம் விஜய தாரணி டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு தங்கியுள்ள விஜயதாரணி கூறுகையில், ''நான் டில்லிக்கு வந்திருப்பது உண்மை. ஆனால், வழக்கறிஞர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் நான் நடத்தும் வழக்கு விசாரணைக்கு வாதிடவந்தேன்.''பா.ஜ.,வில் நான் இணைய இருப்பதாக வரும் செய்திக்கு நான் ஆமாம் என, சொல்லவும் விரும்பவில்லை. அதேசமயம் இல்லை என, சொல்லவும் விரும்பவில்லை,'' என்றார்.- நமது நிருபர் -