உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொண்டர் தலையில் துப்பாக்கி; விஜய் பாதுகாவலரால் திகில்

தொண்டர் தலையில் துப்பாக்கி; விஜய் பாதுகாவலரால் திகில்

மதுரை: மதுரை விமான நிலையத்தில் த.வெ.க., தலைவர் விஜயை பார்க்க வந்த தொண்டர் முன், அவரது பாதுகாவலர் துப்பாக்கியை நீட்டினார்.த.வெ.க., தலைவர் விஜய், தான் நடிக்கும் ஜனநாயகன் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு, கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று மதியம் 12:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.த.வெ.க.,வின் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு விஜயை பார்க்க வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.காரில் வந்த விஜய் இறங்கி, விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சிக்கும் போது, தொண்டர் ஒருவர் போலீஸ் தடுப்புகளையும் மீறி, விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவரை நோக்கி பின்பக்கமாக ஓடி வந்தார். இதை கவனித்தார், விஜயுடன் வந்த பாதுகாவலர் ஒருவர். உடனே, துப்பாக்கியை எடுத்து அந்த தொண்டர் முன் சுடுவது போல் நீட்டினார்.ஓடி வந்தவர் விஜய் தொண்டர் என தெரிந்ததால், மற்ற பாதுகாவலர்கள் துப்பாக்கி நீட்டிய பாதுகாவலரை மடக்கி அழைத்துச் சென்றனர்.

பாய்ந்தது வழக்கு

இதற்கிடையே மே 1 சம்பவத்துக்காக, த.வெ.க.,வை சேர்ந்தோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.த.வெ.க., தலைவர் விஜய் மே 1ல் கொடைக்கானலில் படப்பிடிப்பிற்கு செல்ல, மதுரை விமான நிலையம் வந்தார். அன்று அவரை வரவேற்க ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விமான நிலையத்தில் கூடினர்.விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தினர். போலீசார் மிகுந்த சிரமத்திற்கிடையே தொண்டர்களை கட்டுப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலர்கள் தங்கப்பாண்டி, கல்லணை ஆகியோர் தலைமையில் கட்சியினர் சட்ட விரோதமாக கூடி, பயணியரின் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்ததாக, மூன்று பிரிவுகளில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

angbu ganesh
மே 07, 2025 11:59

இவன் ஒரு ரௌடி கும்பலை வச்சிருக்கான் இவன் எங்க போறான் எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போறானோ அதுங்க இவன் கொடுக்கற பணத்துக்கு அங்க வந்து அட்டகாசம் பண்றானுங்க, இது விஜயேய் செய்யற உள்குத்து வேல, இல்லேன்னா எவனுக்கும் வேற வேல இல்லையா இவன சுத்தியை எப்பவும் இருப்பான்


angbu ganesh
மே 07, 2025 11:54

விஜய் உன் தொண்டரகளை அடக்கு இல்லேன்னா நீ அடங்கு தமிழ் நாட்டுல இருக்கற காட்சிங்க போதும் இப்பவெய் தெரியுது உன் பொழுசு பேசாம பாக்கிஸ்தான் போய்டு


angbu ganesh
மே 07, 2025 11:52

தொண்டனுங்களா thondavaranungala சவக்குழி


Kalyanaraman
மே 07, 2025 08:48

புதிய கட்சி, மக்களின் ஆதரவை பெறவேண்டியதற்கு பதிலாக பொது இடத்தில் பல பொறுக்கித்தனங்களை செய்து மக்களை முகம் சுளிக்க வைப்பதுடன் இல்லாமல் எதிரான மனநிலையை ஏற்படுத்துகிறார்கள்.


Roy
மே 06, 2025 16:16

சல்லி


bogu
மே 06, 2025 15:44

இந்த விடியல் சீமான் வீட்டு security யை தான் arrest பண்ணும் இது B team அதனால எந்த நடவடிக்கையும் எடுக்காது


naranam
மே 06, 2025 13:30

அரை வேக்காடு கட்சியினர் இப்படித்தான் நடந்து கொள்வர்.. படப் பிடிப்பு போல எல்லாம் எளிது என்று நினைத்து விட்டார்கள் போல.


Krishnamurthy Venkatesan
மே 06, 2025 12:43

பிரைவேட் பாதுகாவலர்கள் bounsers இப்படி பொதுவெளியில் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டலாமா? காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Ramesh Sargam
மே 06, 2025 12:21

விஜய்யின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. அடக்கி வாசிக்கவேண்டும். இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 06, 2025 10:18

எனக்கு ஒரு சந்தேகம்.....இதற்கு முன் நடிகர் விஜய் படப்பிடிப்பிற்கு சென்றது இல்லையா.... அப்போதெல்லாம் அவர் செல்வதும் தெரியாது வருவதும் தெரியாது....இப்பொழுது மட்டும் எப்படி கூட்டம் கூடுகிறது.....இது அவரின் செல்வாக்கை காட்ட அவரின் பயண திட்டங்களை முன்கூட்டியே அறிவித்து கூட்டம் சேர்க்கும் யுக்தியாய் இருக்குமோ....இதையே சாக்காக வைத்து வீட்டிலிருந்தே பாலிடிக்ஸ் செய்வாரோ என்னவோ.....!!!


angbu ganesh
மே 07, 2025 11:56

200 % உண்மை, பாருங்கள் இவனுடைய அடுத்த படத்துக்கு பண்ண போற அட்டூழியத்தை இருக்கற அதனை பொறுக்கிங்களையும் theatarukku பணத்தை கொடுத்து லாரில கொண்டுவந்து பண்ண போற அட்டகாசத்தை இவனுக்கு உண்மையான ரசிகர்கள்னு யாரும் கெடயாது இவனே இந்த மாதிரி உருவாக்கி இவன பெருசா காட்டிக்காரன் அவ்ளோதான்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை