உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விஜயை வைத்து வியாபாரம் பார்க்க ஆசை? தினகரன், பன்னீரால் கூட்டணி இழுபறி!

 விஜயை வைத்து வியாபாரம் பார்க்க ஆசை? தினகரன், பன்னீரால் கூட்டணி இழுபறி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜயை வைத்து தேர்தல் செலவுகளை சரிகட்ட தினகரன், பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதால், கூட்டணி பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தில் 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, தன் தலைமையில் கூட்டணி அமைக்க, த.வெ.க., தலைவர் விஜய் முயற்சித்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eyaedoak&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன் கூட்டணியில் இணையும் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், ஏற்கனவே வெளியிட்டுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 100 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆனால், த.வெ.க., கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது; புதிய கட்சிகளை கூட்டணியில் இழுக்கவும் பேச்சு நடத்தி வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என, இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிடிவாதத்தால், பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருந்த அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார். அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர முயற்சித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் கதவு அடைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும், த.வெ.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர். தேர்தல் செலவு தொடர்பாக முடிவு எட்டப்படாததால், கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால், த.வெ.க., கூட்டணியில் இணைவதை தவிர, அ.ம.மு.க.,வுக்கு வேறு வழியில்லை. பன்னீர்செல்வத்தை இழுக்க, தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் இணைந்தால், தன் அரசியல் குரு ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதையில் இருந்து விலகி விட்டதாக, சொந்த சமுதாய மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என பன்னீர்செல்வம் அஞ்சுகிறார். இதனால், அவரும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த இரண்டு கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கு, விஜயும் விரும்புகிறார். ஆனால், கூட்டணியில், அ.ம.மு.க.,விற்கு 30 'சீட்'களும், பன்னீர்செல்வத்தின் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்திற்கு, 10 'சீட்'களும் கேட்கப்படுகின்றன. கூட்டணியில் இணைய வேட்பாளரின் செலவுக்கு, கணிசமான தொகை கேட்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் கடும் குழப்பத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் பன்னீரும், தினகரனும் இறங்கி வரும் பட்சத்தில், கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Haja Kuthubdeen
டிச 28, 2025 15:23

விஜய் அண்ணா கவணம்.விழப்போகும் ஒவ்வொரு ஓட்டும் உங்களுக்கான..உங்களை நம்பி விழும் ஓட்டுக்கள்.கூட்டணி அது இதுன்னு கவல படாம உங்களை நம்பி நில்லுங்க...நான் அஇஅதிமுககாரன்தான்.உங்களையும் பிடிக்கும்.இந்த ஏழரைகளையெல்லாம் சேர்த்து நின்றால் விழும் ஓட்டும் விழாது.. தோற்றே போனாலும் உங்களுக்கான இடம் உண்டு...நாளைக்கு இதுக எல்லாமே உங்களுக்கு விழுந்த ஓட்டை சொந்தம் கொண்டாடும். எச்சரிக்கையாவே சொல்றேன்.நடக்குதா இல்லையானு காலம் சொல்லும்.234தொகுதியிலும் கேப்டனை போல தணித்து இறங்குங்கள்.


Prasanna
டிச 28, 2025 15:01

விஜயயை தனியாக நின்று போட்டியிடுவார் அல்லது சிறிய கட்சியாக இருந்தாலும் தமிழ் மாநிலக் கட்சி போன்ற நல்ல கட்சிகளுடன் போட்டியிடுவாரென்று பார்த்தால் அ ம மு க உடன் கூட்டணியா? உங்கள் மேலுள்ள மதிப்பே போய் விட்டது. தினகரன் எப்பேர்பட்டவனென்று எல்லோருக்கும் தெரியும். நீங்கள் தனித்து நின்று போட்டியிட்டால் தான் உங்கள் பலம் தெரியும். தனித்து நின்று போட்டியிட்டால் ஒருவேளை தோற்றாலும் கூட உங்களுக்கு மதிப்பு இருக்கும். ஆனால் இப்போதுள்ள மக்கள் மன நிலையில் நீங்கள் எதிர் கட்சியாகக் குறைந்தபட்சம் வர வாய்ப்புண்டு. உங்கள் மதிப்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல் என் குரல் உங்களை அடையாது, அடைந்தாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்.


Haja Kuthubdeen
டிச 28, 2025 15:25

சிறப்பா என் மனதில் தோனியதையே சொல்லி விட்டீர்கள்.நம்மை போன்றோரின் கருத்து விஜயை எட்டுமா என்பது தெரியவில்லையே....


Haja Kuthubdeen
டிச 28, 2025 14:32

விஜய் கவணம்...இவுங்களால் அம்மாஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை.. விழவேண்டிய ஓட்டும் இவய்ங்க புண்ணியத்தில் விழாது.டிடிவி கூட கூட்டணி போட்ட எந்த கட்சியும் விளங்காது.


முருகன்
டிச 28, 2025 09:22

இவர்கள் அதிமுக உடன் கூட்டணி என்றால் இந்த தலைப்பு வராது ஏன் என்றால்....


A viswanathan
டிச 28, 2025 08:35

இவர்கள் எல்லாம் சேர்ந்து எந்த ஒருநோக்கத்திற்காக தலைவர் அதிமுகவை தொடங்கினரோ அந்த கட்சி யை சுவடு தெரியாமல் அழித்து விட்டு தான் போவார்கள்இவர்களின் EGO வால் .எறிவந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் இவர்கள் அனைவரும்.வருத்தமாக உள்ளது.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ