உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அறிவாலயத்தில் வார் ரூம் திறப்பு; 12 நாளில் 77.34 லட்சம் பேர் சேர்ப்பு

அறிவாலயத்தில் வார் ரூம் திறப்பு; 12 நாளில் 77.34 லட்சம் பேர் சேர்ப்பு

சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார இயக்கத்தின் வாயிலாக கடந்த 12 நாட்களில், 77 லட்சத்து 34,937 பேர், தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும், அவர்களில், 49 லட்சத்து, 11,090 பேர் புதிதாக சேர்ந்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை துவங்கியுள்ள ஆளும் தி.மு.க., கடந்த 1ம் தேதி முதல், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=15v7xqqe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., தலைவர் முதல் கிளைத்தலைவர் வரை அனைத்து நிர்வாகிகளும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் வீடு வீடாகச் சென்று, உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். 'மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது' என, பிரசாரமும் செய்து வருகின்றனர். இந்த பிரசார, உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை கண்காணிக்க, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு, 'அரசு திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கின்றன. அதேசமயம் அ.தி.மு.க., -- பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; தமிழகத்தையும், தமிழகத்தின் ஒற்றுமையையும் சிதைத்து, மீண்டும் நுாறாண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்' என, மக்கள் தெளிவாக சொல்கின்றனர்.விறுவிறுவென நடந்து வரும், 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார இயக்கத்தின் வாயிலாக, இதுவரை 77 லட்சத்து 34,937 பேர், தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களில், 49 லட்சத்து 11,090 பேர் புதிய உறுப்பினர்கள். தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, அவர்கள் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதலிடத்தில் கரூர்

'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் அதிகபட்சமாக, கரூர் மாவட்டத்தில், 41 சதவீத வாக்காளர்களை, தி.மு.க.,வில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். அவர்களை முந்தும் வகையில், பிற மாவட்ட தி.மு.க.,வினரும் மும்முரம் காட்ட வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக, கரூர் மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை, முதல்வர் பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூலை 13, 2025 22:25

77.34 லட்சம் பேர் தாகத்தை தீர்க்க தண்ணீர் அதிக அளவில் இருக்கா?


vivek
ஜூலை 13, 2025 16:18

என் கருத்து படி ஓவிய விஜய் இன்றைக்கு வாங்கிய இருநூறு ரூபாய் நன்றாக செரித்தது


subramanian
ஜூலை 13, 2025 14:32

த வெ க வின் வளர்ச்சியை தடுக்க, இப்படி செய்கிறார்கள்.


lana
ஜூலை 13, 2025 11:06

77 லட்சத்து உறுப்பினர்கள் அவர்கள் இல 49 லட்சம் புது உறுப்பினர்கள். நல்லா வருவீர்கள்


Oviya Vijay
ஜூலை 13, 2025 11:01

தமிழகத்தில் இப்போதிருக்கும் கட்சிகளில் உள்கட்டமைப்பு என்பது மிகச்சிறப்பாக இருப்பது திமுகவிற்கு மட்டும் தான். குக்கிராமங்கள் வரையில் இக்கட்சிக்கென்று நிர்வாகிகள்... இவைகள் தான் அடித்தளம்... பின் எவ்வாறு இவர்கள் தோற்க முடியும்... அதிமுகவிற்கும் இவ்வாறான கட்டமைப்புகள் ஒருகாலத்தில் இருந்திருந்தாலும் மக்களைக் கவர்ந்த ஒரு தலைமை தற்போது இல்லாததால் அது ஸ்லீப்பர் செல் போல அமைதியாகக் கிடக்கிறது... நாம் ஒரு ஹோட்டலுக்குச் சென்று நமக்கு பரிமாறுவதற்கு நேரமானால் வேடிக்கையாக இப்போ தான் கோழி பிடிக்க போயிருக்காய்ங்க போல என சொல்வதுண்டு... அதே போல தான் தமிழக பாஜக இப்போது தான் பூத் கமிட்டி இருப்பது போன்று போலிக் கணக்கு காண்பித்திருப்பார்களோ என விசாரணையை முடுக்கி விட்டுள்ளது... ஏனென்றால் கணக்கு காட்டிய அளவிற்குக் கூட ஓட்டுக்கள் பதிவாகவில்லை என்பது தான் அவர்களுக்கான ஆதங்கம்... ஆனால் இதுவரை ஒரு தேர்தல் கூட சந்தித்திராத தவெகவோ பூத் கமிட்டியின் முக்கியத்துவம் உணர்ந்து அதை பலப்படுத்துவது தான் முதல் வேலை என களமிறங்கியுள்ளது... ஆக மொத்தத்தில் குதிரைகளாக திமுகவும் தவெகவும்... ஆமைகளாக அதிமுகவும் பாஜகவும்...


vivek
ஜூலை 13, 2025 16:17

இன்றைக்கு வாங்கிய இருநூறு ரூபாய் நன்றாக செரித்தது ஓவியரே


theruvasagan
ஜூலை 13, 2025 22:09

நானா இருந்தா இந்த முட்டுக்கு பேட்டாவை டபுளா குடுத்திருப்பேன். அப்பப்பா. ஒரு ஒரு விஷயத்துக்கும் எப்படி தம் கட்டி முட்டு குடுக்கறாரு.


ManiK
ஜூலை 13, 2025 09:53

பாகிஸ்தான், பங்லா, சீனாலேந்து இந்த கட்சி ரொம்ப பிடிச்சுபோய் லட்சம்பேர் சேந்திருப்பானுவ.


Padmasridharan
ஜூலை 13, 2025 05:12

"மண், மொழி, மானம் காக்க.." சாமியோவ் மண்ணெல்லாம் சிமெண்ட் தரைகளாக மாறியிருக்கின்றன.. வட மாநில மொழிகள் பேசுபவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகின்றனர்.. மானத்தை வாங்க காக்கி சட்டை போட்டவர்கள் மக்களை ஒருமையில் அசிங்கமாக பேசுவதும், மிரட்டியடிப்பதும் நடக்கின்றது.. தனியாக நின்று நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமில்லாமல் அரசியலில் ஜெயிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கூட்டணி வைப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை