உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகாரி போட்ட வீடியோவால் சரிந்தது தர்ப்பூசணி விற்பனை: விவசாயிகள் குமுறல்

அதிகாரி போட்ட வீடியோவால் சரிந்தது தர்ப்பூசணி விற்பனை: விவசாயிகள் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'தமிழக உணவு பாதுகாப்பு துறை ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கையால், தர்ப்பூசணி விற்பனை குறைந்து, நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்' என, விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.தமிழகத்தில் கோடைக் காலம் துவங்கி விட்டதால், இளநீர், தர்ப்பூசணி, நுங்கு உள்ளிட்ட, உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை, வாங்கி சாப்பிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், சிலர் தர்ப்பூசணியில் சிவப்பு நிறத்திற்காக, ஊசி வழியே ரசாயனத்தை கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'ரசாயனம் கலந்த தர்ப்பூசணி, அடர் சிவப்பு நிறத்திலும், ரசாயனம் கலக்காத தர்ப்பூசணி, இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தர்ப்பூசணியை வாங்கி சாப்பிட வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த, 'வீடியோ'வால், தர்ப்பூசணி விற்பனை குறைந்து விட்டதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாய நலச்சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:தமிழகத்தில் செங்கல் பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், 7,000 விவசாயிகள், 14,000 ஏக்கருக்கு மேல் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது. துவக்கத்தில் தர்ப்பூசணி 1,000 கிலோ, 14,000 ரூபாய் வரை விற்பனையானது. பிறகு, 10,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வீடியோ வெளியான பிறகு, 3,000 ரூபாயாக குறைந்து விட்டது.அறுவடை செய்யும் போது, தர்ப்பூசணி இளஞ்சிவப்பிலும், ஐந்து நாட்களுக்கு பிறகு அடர் சிவப்பிலும் மாறுவது அதன் இயல்பு.அறுவடை செய்த நாளில் இருந்து, 15 நாட்கள் வரை தர்ப்பூசணி சாப்பிட உகந்ததாக இருக்கும்.தர்ப்பூசணியை சிறிதளவு, 'கட்' செய்தாலும், குறிப்பிட்ட சில மணி நேரங்களில், சாப்பிட முடியாத நிலைக்கு வந்து விடும். ரசாயன ஊசி போட்டால், அவை ஓரிரு நாட்களுக்கு மேல் தாங்காது; விரைவில் கெட்டு விடும். இதனால், தர்ப்பூசணியில் ரசாயனம் கலக்க வாய்ப்பில்லை. இவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புரிந்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஏப் 02, 2025 10:53

நெடுஞ்சாலையில் விற்கப்படும் உணவு பண்டங்கள் பாக்கெட்கள் 90 விழுக்காடு காலாவதி ஆனவை அவர்கள் தரும் கையூட்டின் காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை புகார் குப்பைகூடைக்குதான்


Pandyan Pandyan
ஏப் 01, 2025 21:18

ஒருவர் செய்யும் தவறு எல்லோரையும் பாதிக்கும் இது எதுதான் சரியாக உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவுகளில் கலப்படம் இல்லாமல் இருக்கிறது சிறிய பெட்டி கடை முதல் பெரிய மளிகை கடை வரை விற்கும் உணவு பொருட்கள் எதுதான் தரமானதாக உள்ளது லாபத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள் மக்கள் நலத்தை யாரும் பார்ப்பது இல்லை


நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு.
மார் 31, 2025 21:59

சக்கை மாதிரி இருக்கு, சுவையே இல்ல


Siva Kumar
மார் 31, 2025 21:29

நானும் ஒரு விவசாய குடும்பத்தின் மகன் என்பதை வருத்தத்துடனும் மேலும் வெளிமார்க்கெட்டில் தான் கலப்படம் செய்கிறார்கள் என்று பயத்துடன் இருந்தோம் ஆனால் ரிலையன்ஸ் ஷோரூம் இல் வாங்கிய தர்ப்பூசணிகளும் கெமிக்கலால் கலப்படம் செய்யப்பட்டது எங்களால் சோதித்து அறிந்து கொள்ள முடிந்தது.


ManiK
மார் 31, 2025 18:18

அந்த அதிகாரி என்ன ஸ்டாலினா அல்லது உதநிதியா அந்த அளவுக்கு மக்கள நலம்மேல் அக்கறை காட்ட??. எடு சாட்டையை...உடனே ட்ராஸ்வர் செய்ய தலைவர் ஆனையிடுவார்.


R Dhasarathan
மார் 31, 2025 16:18

FPO மூலமாக விற்பனை செய்யவும். விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் வியாபாரிகள் அதிக விலைக்கு கலப்படம் செய்து உங்கள் பெயரையும் கெடுக்கிறார்கள்


Karthik
மார் 31, 2025 19:00

Well said.


தலைவர்
மார் 31, 2025 16:04

அதிகாரி செய்தது சரியே


S. Neelakanta Pillai
மார் 31, 2025 13:50

விவசாயிகள் என்கிற போர்வையில் உணவு கலப்படம் சார்ந்த நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளையும் முடக்கி போடும் தந்திரம் இது. அதிக லாபம் சம்பாதிக்கும் இடைத்தரங்களாகிய வியாபாரிகள் விவசாயிகளை முன்னிறுத்தி அறிக்கை விட சொல்வது எவ்வளவு அபத்தம் என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதைச் செய்தாலும் அதை விவசாயி என்கின்ற பெயரில் நியாயப்படுத்திட முடியாது. அது விவசாயி ஆனாலும் குற்றவாளிகள் தான்


Ifooods Coimbatore
மார் 31, 2025 12:58

விவசாயிகள் நேரடியாக உங்கள் கிராமங்களிலயே வியாபாரம் செய்யுங்கள்.. லாபமும் அதிகமா கிடைக்கும் நண்பர்களே


baala
ஏப் 01, 2025 09:24

இது என்ன கருத்து. அதெப்படி முடியும். நகரத்தில் இருப்பவர்கள் எப்படி வாங்கி உபயோகிக்க முடியும்.


ஈசன்
மார் 31, 2025 10:16

விவசாயிகள் அறுவடை செய்த பிறகு இந்த இரசாயன கலப்பை செய்பவர்கள் இடை தரகர்கள் கொள்முதல் செய்பவர்கள். இந்த உண்மையை அரசு அதிகாரிகளே வெளியிட்டிருப்பது வரவேற்க பட வேண்டிய விஷயம்.


புதிய வீடியோ