உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க.,விடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும்: அண்ணாமலை

அ.தி.மு.க.,விடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், அ.தி.மு.க., கூட்டணியில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டும்' என, பா.ஜ., மேலிடத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தரப்பில் வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=81fhm4gx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என, மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்லவில்லை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியிருக்கிறார்.

அதிர்வலை

அதாவது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதை, பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.இது, தமிழக பா.ஜ.,வில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். '2026ல் தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்' என, அமித் ஷா அழுத்தம் திருத்தமாக இரண்டு முறை கூறி சென்றுள்ளார். ஆனால், கூட்டணி ஆட்சி என்ற கருத்தை, பழனிசாமி ஏற்க மறுக்கிறார். எனவே, கடந்த லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், சட்டசபை தொகுதிகளை பங்கீடு செய்ய வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு, அண்ணாமலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதாவது, கடந்த லோக்சபா தேர்தலில், 20.5 சதவீத ஓட்டுகளை அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணி 18.5 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலுடன் நடந்த விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., 2வது இடமும், அ.தி.மு.க., 4வது இடமும் பிடித்தன.கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 12 தொகுதிகள் கேட்டது. ஆனால், ஆறு தான் தர முடியும் என கூறி, அ.தி.மு.க., கூட்டணியை முறித்துக் கொண்டது.

7 சதவீதம் ஓட்டுகள்

கூட்டணி முறிவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுகளை, அ.தி.மு.க., தரப்பு காரணமாக சொன்னாலும், நடந்தது, தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை தான்.அதேபோல, உள்ளாட்சி தேர்தலிலும், பா.ஜ.,வுக்கு 5 சதவீதம் இடங்கள் கேட்டதற்கு, அதைக் கொடுக்க அ.தி.மு.க., முன்வரவில்லை. இதனால், பா.ஜ., தனித்து போட்டியிட்டு, 7 சதவீதம் ஓட்டுகள் பெற்றது.அதனால், கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு 84 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அதற்கு குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என, பா.ஜ., மேலிடத்தில், அண்ணாமலை வலியுறுத்தியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அதிகத் தொகுதிகளை பெறுவதால், கூட்டணியில் பா.ஜ.,வுக்கு ஆதரவான கட்சிகள் இடம் பெறும்போது, அக்கட்சிகளுக்கு பா.ஜ., தரப்பில் தொகுதிகள் ஒதுக்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுஉள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.இது தொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி கிடையாது என்பதில், பழனிசாமி தெளிவாக இருக்கிறார். நடிகர் விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கான பிரதான காரணமே, கூட்டணி ஆட்சி குறித்து வலியுறுத்தியதுதான். அதை தெளிவாக, அமித் ஷாவிடம் சொல்லித்தான், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள பழனிசாமி ஒப்புக்கொண்டார்.

ஆசைப்படலாம்

'தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்' என அமித் ஷா சொன்னதற்கு, கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் இடம் பெற்ற கூட்டணி ஆட்சி என்பது அர்த்தமல்ல. கூட்டணியில் இருக்கும் பிரதான கட்சியான அ.தி.மு.க.,வின் ஆட்சி என்பதுதான்.அதே போல, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவதே அ.தி.மு.க., தான். அதனால் கூட்டணியில், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை, கட்சிப் பொதுச்செயலர் பழனிசாமி தான் முடிவெடுப்பார். பா.ஜ., தரப்பில் 84 என்ன, 94 தொகுதிகளில் போட்டியிடக்கூட ஆசைப்படலாம்; தவறில்லை. ஆனால், ஒதுக்கீடு செய்ய வேண்டுமே. தேர்தல் நெருக்கத்தில், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்பதை பழனிசாமி மட்டுமே முடிவெடுத்து அறிவிப்பார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Nallavan
மே 05, 2025 11:42

233 தொகுதிகள் வரை கேட்கலாம் ஆனால் வேட்பாளர் வேண்டுமே, வெற்றிபெற வேண்டுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு


Mariadoss E
ஏப் 26, 2025 17:28

பீகார், மஹராஸ்ட்ரா போல் பிஜேபி தமது டெக்னிக்கை தமிழ்நாட்டில் ஆரம்பித்துள்ளது. முதலில் அதிமுக 160 பிஜேபி 80 அடுத்து 50:50 நெக்ஸ்ட் பிஜேபி 160 & அதிமுக 80 இது தான் நடக்கும் அப்புறம் அதிமுக காலி பீகார் - நிதிஷ்குமார், மகாராஷ்டிரா - உத்தவ் தாக்கரே போல


Thetamilan
ஏப் 18, 2025 00:10

8 தொகுதிகள் கிடைக்காது


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 17:47

அஇஅதிமுக வாசகர் நான் ஒருத்தன் மட்டும்தான் இருக்கேனா என்று சந்தேகமா இருக்கு...


aaruthirumalai
ஏப் 17, 2025 13:53

புயல் கரையை இன்னுமா கடக்கல


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 15:57

அண்ணாமலை ஆளுங்க இன்னும் பிஜெபி தலைவர் அவர்தான் என்ற நிலையில் இருந்து மீள வில்லை...


Muralidharan S
ஏப் 17, 2025 12:15

கூட்டணி இல்லாமல் அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கும் நிலையில் இல்லை.. ஆணவம் படலாம்.. தப்பில்லை.. பாராளுமன்ற தேர்தல் முடிவை எடப்பாடி மறந்துவிட்டார் போல... பிஜேபி தவிர வேறு எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி சேர தாயாராக இல்லை என்பதை உணராமல், எடப்பாடி தன்னை ஏதோ எம்ஜியார், ஜெயலலிதா ரேஞ்சுக்கு உயர்த்திக்கொண்டு கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார்.. திராவிஷா முஸ்லீம் கழகத்தை தோற்கடிது அப்புறப்படுத்த வேண்டுமானால் எடப்பாடி கண்டிஷன் போடக்கூடாது.. கண்டிஷன் போடும் நிலைமையிலும் , இடத்திலும் அவரும் இல்லை அவரது கட்சியும் இல்லை.. பாஜகவிற்கு இழப்பதற்கு தமிழகத்தில் ஒன்றும் இல்லை.. ஆனால், எடப்பாடி இதை புரிந்துகொண்டு நடக்காவிட்டால், 2026 சட்டசபை தேர்தல் தோல்வி அதிமுகாவை நீர்த்துபோகச்செய்து தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்று முகவரி இல்லாமல் மறையச்செய்யும்.


Haja Kuthubdeen
ஏப் 17, 2025 15:52

இந்த வியாக்கியானத்தை அமித்சாவிடம் டெல்லியிடம் கேட்கனும்.எடப்பாடியிடம் இல்லை...


K.Ravi Chandran, padukkottai
ஏப் 17, 2025 11:14

மாநிலத் தலைவர் வேறொருவர். இவர் எதற்கு பேச்சு வார்த்தையின் போது பேச வேண்டிய விசயத்தை பொது வெளியில் பேசுகிறார்? அ.தி.முக , பா.ஜ.க கூட்டணியை உடைக்க ஸ்டாலின் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியது இல்லை. அந்த வேலையை அண்ணாமலையாரே பார்த்துக் கொள்வார்.


சத்யநாராயணன்
ஏப் 17, 2025 11:49

எடப்பாடி பழனிச்சாமியின் பொறுப்பற்ற பேச்சுக்கு அண்ணாமலை அவர்களின் பதிலடி சரிதான்


K.Ramachandran
ஏப் 17, 2025 11:00

2001 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஒரு வெற்றி கூட்டணி அமைத்தார். ADMK 140 தொகுதிகளில் போட்டி. 94 இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டி. அதே பங்கீடு இப்பவும் செய்யலாம். ADMK - 140 [ ADMK - 130, DMDK - 10] BJP - 41 PMK - 27 AMMK - 12 TMC - 5 Others - 5


venugopal s
ஏப் 17, 2025 10:55

அமித்ஷா விடாக்கண்டன் என்றால் ஈ பி எஸ் கொடாக்கண்டனாக இருப்பார் போல் உள்ளதே!


ramesh
ஏப் 17, 2025 10:47

இப்படி உளறிக்கொண்டே இருந்ததால் தான் அமித்ஷா இவரின் பியூஸ் ஐ பிடுங்கி விட்டு விட்டார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை