உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / யார் ஆட்சியாக இருந்தாலும் போராடுவோம்: சண்முகம்

யார் ஆட்சியாக இருந்தாலும் போராடுவோம்: சண்முகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்: பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி:முதலில் பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அண்ணாமலை செல்ல வேண்டும். அங்கு முழுதுமாக போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். பின், தமிழகம் வந்து, போதையில்லா தமிழகம் வேண்டும் என போராட்டம் நடத்தட்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மது வியாபாரம் செய்வார்களாம்; ஆனால், தமிழகத்தில் மட்டும் அதை எதிர்ப்பார்களாம். யார் காதில் பூ சுற்ற இதெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை. அண்ணாமலை நடத்தும் போராட்டம் அனைத்துமே நாடகமாக உள்ளது. அதனால்தான் அவருடைய பேச்சையும் செயலையும் மக்கள்கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.அரசு கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ பேராசிரியர்களை நிரந்த பணியாளராக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவுபடி, ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதை சட்டசபையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கையாக எழுப்புவர்.மக்களை பாதிக்கிற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி போராட்டத்தை முன்னெடுக்கத்தான் செய்யும். யார் ஆட்சி என பார்க்க மாட்டோம். நடிகர் விஜய் கட்சி துவங்கியதுமே, முதல்வர் ஆக ஆசைப்படுகிறார். அது தமிழகத்தில் சாத்தியமில்லை.வரும் சட்டசபைத் தேர்தலில், மா.கம்யூ., கட்சி கூடுதல் எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மணி
மார் 23, 2025 17:37

மாணம் ரோசம் இல்லா கயாவழிக்கும் பல் இது பேச வந்துட்டான்


SUBBU,MADURAI
மார் 23, 2025 20:25

திமுகவை பகைத்துக் கொண்டால் பரன் மேல் இருக்கும் உண்டியலை தூசி தட்டி எடுத்து மீண்டும் தமிழக மக்களிடம் பிச்சை எடுக்க வேண்டி வரும் அதனால் வெ.மா.ரோ. எல்லாத்தையும் விட்டு விட்டு மீண்டும் திமுவிடமே சரணைடைவது நல்லது அதுதான் தமிழக கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் ஒரே வழி.


surya krishna
மார் 23, 2025 15:06

Communists are criminals, their target is money only


எவர்கிங்
மார் 23, 2025 13:33

பெட்டி முக்கியம்


கண்ணன்
மார் 23, 2025 12:47

எதையும் பட்டறியும் தன்மைகூட இல்லாத ஒரு உண்டியல் கூட்டம்


orange தமிழன்
மார் 23, 2025 12:32

கொத்தடிமைகள்.....


சசிக்குமார் திருப்பூர்
மார் 23, 2025 12:11

உன் வீட்டை சுத்தம் செய்து பிறகு ....


தமிழ் நிலன்
மார் 23, 2025 12:08

அண்ணாமலை போராடுவது இருக்கட்டும். தமிழக மக்களுக்காக சண்முகம் போராட்டம் நடத்தலாமே. ஏன் நடத்தவில்லை? கம்யூனிஸ்டுகளை ஒட்டுண்ணிகள் என்று சைமன் சொல்வது சரிதான்.


Bala
மார் 23, 2025 10:36

ஊழல் பெருச்சாளி திமுக விடம் பிச்சை எடுத்து பொழப்பை நடத்தும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏழை விவசாய குடும்பத்திலிருந்து வந்து சொல்லிலும் செயலிலும் நேர்மையை கடைபிடிக்கும் திரு அண்ணாமலை அவர்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை


தியாகு
மார் 23, 2025 09:45

தமிழரான திரு.அண்ணாமலை தமிழ்நாட்டில் மதுவை எதிர்த்து போராடுவதில் என்ன தவறு


Ramkumar Ramanathan
மார் 23, 2025 09:45

communist parties agitating against a state govt is a thing of past. nowadays, all are jalra comrades, just doing lip service to its cadres, not doing anything for the people


சமீபத்திய செய்தி