உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தி.மு.க.,வுடன் சண்டை போட்டு கூடுதல் சீட் கேட்போம்: திருமா

 தி.மு.க.,வுடன் சண்டை போட்டு கூடுதல் சீட் கேட்போம்: திருமா

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் சண்டை போட்டு, கூடுதல் 'சீட்' கேட்போமே தவிர, அக்கூட்டணியில் இருந்து விலக மாட்டோம்,'' என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார். அவர் கூறியதாவது: தி.மு.க., வலிமையான இயக்கம்; 75 ஆண்டுகள் கடந்து, இன்றும் ஆட்சியில் இருக்கும் இயக்கம். அதற்கு நாங்கள் முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு பதில் சொல்ல தெரியும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0xtakuqs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் தி.மு.க.,வுக்காக பேசவில்லை. நான் உள்வாங்கிய அரசியலுக்காக பேசுகிறேன். சிலருடன் சேர்ந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்; பொருளாதாரத்திலும் மேம்பாடு வரும் என்பதற்காக, கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது. 'நடிகர் கட்சி துவங்கி விட்டார்; அவர் பக்கம் தான் மக்கள் சாய்கின்றனர். நீங்கள் எல்லாம் தோற்று விடுவீர்கள்' என கூறுகின்றனர். அவ்வாறு தோற்றால் தான் என்ன? அதற்காக மானத்தை விட்டு விட்டு போக முடியுமா? அரசியலில் மானம் என்பதும் முக்கியம் தான். யாருக்காகவும், எதற்காகவும் கொள்கையை விட்டு விட்டு, யாரோடும் செல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் யாருடனும் உறவு இல்லை; அப்படித்தான் தி.மு.க.,வுடனும் உள்ளது. மதச்சார்பற்ற கூட்டணி என்பதால், 'இண்டி' கூட்டணியில் தொடர்கிறோம். தி.மு.க., கூட்டணியில் 'சீட்' குறைவாக கொடுத்தால், அதில் என்ன பாதிப்பு இருக்கப் போகிறது? முடிந்தால் சண்டை போட்டு கூடுதல் சீட் வாங்குவோம்; இல்லையென்றால் அனுசரித்து செல்வோம். ஆனால், சீட் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். இந்த திருமாவளவன் ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டான். கட்சியினர் ஒவ்வொருவருக்கும் இது தான் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முருகன்
ஜன 01, 2026 16:07

விஜய் இல்லை என்றால் இவர்களை..................


ram
ஜன 01, 2026 14:53

குருமாவை ஓரமா போய் விளையாட சொல்லுங்கப்பா..


SUBBU,MADURAI
ஜன 01, 2026 13:56

கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா? வேணாம் நானே கேட்கிறேன் எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்! சரி கேள், சர்க்கரைக்கு? எறும்பு, சாக்குக்கு? கரையான், கூவத்துக்கு? முதலை, மின் வெட்டுக்கு? அணில், தண்ணீர் தொட்டிக்கு? காகம், என்னது காகமா? sorry திருமா, ம்.ம் சபாஷ் இதுதான் திராவிட வரலாறு...


சந்திரன்
ஜன 01, 2026 10:26

சோறு முக்கியம்ல அதுக்காக உடைந்த பிளாஸ்டிக் சேர் என்ன தரையிலகூட உக்காருவான்


suresh Sridharan
ஜன 01, 2026 10:22

சரக்கு ஃப்ரீ சைடிஷ் க்கு சண்டை அவ்வளவுதான் பெருசா யாரும் எதிர்பார்க்காதீங்க


Siva Balan
ஜன 01, 2026 08:08

காலில் விழுந்து கும்பிடுவதை திராவிட மொழியில் சண்டை என்கிறாரோ.....


ரட்னம்
ஜன 01, 2026 07:28

அப்பறம்… நான் விளையாட்டா பேசுவதெல்லாம் சும்மா, நீங்க தப்பா எடுத்துட்டீங்க… ஐயோ, ஐயோ…


Sun
ஜன 01, 2026 06:05

என்ன !எங்கூட சண்டைக்கு வர்ரியா? அய்யோ இல்ல தலிவரே வர்ர சண்டேக்கு வர்றேன்னுதான் சொன்னேன்! சண்டைக்கு வர்றேன்னு நான் சொல்லவே இல்ல தலிவரே!


Rajarajan
ஜன 01, 2026 06:01

என்னது மானமா ?? பிளாஷ்பாக் ஓபன். திராவிட கயவர்களுடனும், நச்சுப்பாம்புகளுடனும் கூட்டணி இல்லை, அப்படினு நீங்க சொன்னதா ஒரு மைண்ட் வாய்ஸ் கேக்குது. உங்களுக்கு கேக்குதா மிஸ்டர் திருமா.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 01, 2026 05:21

செய்தி ஆசிரியர் சரியாக புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. ஆகவே அனைவரும் திமுகவுடன் சண்டை போட்டு கூடுதல் பெட்டி கேட்போம் என்று மாற்றி படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்