உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்

பயங்கரவாதிகள் புகலிடம் மேற்கு வங்கம்; அமித் ஷா மம்தா மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி, காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை நடத்தியது யார் என பதிலடி தந்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 2011 முதல் மம்தா தொடர்ந்து ஆட்சியில் உள்ளார். தமிழகத்துடன் சேர்த்து, மேற்கு வங்கத்துக்கும் வரும், ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், திரிணமுல் மற்றும் பா.ஜ., இப்போதே பிரசாரத்தை துவக்கிவிட்டன. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ள, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, கொல்கட்டாவில் நேற்று பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி சரமாரி கேள்விகளை எழுப்பினார். எல்லையை திறந்து விட்டார்! கொல்கட்டாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: திரிணமுல் காங்கிரசின், 14 ஆண்டு ஆட்சி பயம் நிறைந்த, ஊழல் மலிந்த, முறைகேடுகள் மிகுந்ததாக உள்ளது. ஊடுருவல் காரணமாக மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. எல்லைகளை திறந்து விட்டதால், மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. வர உள்ள சட்டசபை தேர்தல் ஊடுருவல் பிரச்னையை மையப்படுத்தியே நடைபெறும். மேற்கு வங்க எல்லைகள் வழியாக நடக்கும் ஊடுருவல் வெறும் மாநில பிரச்னை அல்ல; இது தேசிய பாதுகாப்பு பிரச்னை. நாட்டின் கலாசாரத்தையும் பாதுகாப்பையும் காக்க வேண்டுமானால், மேற்கு வங்க எல்லைகளை மூடி கண்காணிக்க கூடிய அரசு தேவை. திரிணமுல் காங்கிரசால் இது முடியாது; பா.ஜ.,வால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார். நீங்களே காரணம்! இதற்கிடையே கொல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கம் பயங்கரவாதிகளின் புகலிடம் என்றால், ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடந்தது எப்படி? அந்த தாக்குதலை நீங்கள் நடத்தினீர்களா? சமீபத்தில் டில்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு யார் காரணம்? எல்லைப் பகுதிகளில் பெட்ராபோல், சாங்க்ரபந்தாவில் வேலி அமைப்பதற்காக ஏற்கனவே நிலம் வழங்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் நிலம் கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்தப் பணியும் நடக்கவில்லை. மத்திய அரசின் அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும் மாநிலம் நிலம் வழங்கியதால் தான் செயல்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடப்பது ஒரு முறைகேடு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ராமகிருஷ்ணன்
டிச 31, 2025 14:32

ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அறிந்ததே. மேற்கு வங்கத்தில் உங்கள் நடவடிக்கை என்ன. ஓட்டுக்காக ரேங்கியா கும்பலை வளர்த்து வருவதற்கு என்ன பதில். அவர்களுக்கு ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை கொடுத்து தேசத்துக்கு பேராபத்து கொடுத்து உள்ளதற்கு பதில் சொல்லு.


SUBBU,MADURAI
டிச 31, 2025 08:01

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க மம்தா அரசுக்கு விடுத்த நியாமான கேள்வி? வங்கதேச நாட்டின் ஊடுருவல்காரர்கள் ஏன் முதலில் மேற்கு வங்கத்திற்குள் நுழைகிறார்கள்? உங்கள் கிராம நிர்வாக அலுவலர்களும் காவல் நிலையங்களும் என்ன செய்கின்றன? ஏன் அவர்கள் திருப்பி அனுப்பப் படுவதில்லை அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் இதுபோன்ற ஊடுருவல் நின்றுவிட்டது ஏன் மேற்கு வங்கத்தில் மட்டும் இது தொடர்கிறது? மேற்கு வங்கத்தின் மக்கள் தொகை அமைப்பை மாற்றுவதற்கும் உங்கள் வாக்கு வங்கியை விரிவுபடுத்துவதற்கும் உங்கள் ஆட்சியின் கீழ் இது நடந்துகொண்டிருக்கிறது அப்படித்தானே அதுதானே உண்மை...


Ramaraj P
டிச 31, 2025 06:57

இந்த முறை அம்மணிக்கு கூப்பு தான்.


SUBBU,MADURAI
டிச 31, 2025 05:34

One number tells the story of Bengals 60-year demographic shift. 1951: 5.1M Muslims 2011: 24.6M Muslims A 381.7% rise, while Hindus grew only 210.2%. The divergence is striking. Who benefits from not asking why? In 1951, West Bengal was 76.9% Hindu and 19.6% Muslim. The partition aimed to s homelands. Yet by 2011, Muslim numbers quintupled while Hindu growth lagged. What explains this? Following Bangladeshs liberation in 1971, Bengals borders became increasingly porous. Millions crossed over. But documentation, verification, and border control werent handled equally by all governments. Policy, and not fate, shaped the outcome. Between 1951 2011: Muslim growth: +381.7% Hindu growth: +210.2% Total population: +247% The imbalance reflects administrative priorities who was counted, who was ignored, and who was politically convenien.Murshidabad, Malda, Dinajpur border districts, now show Muslim percentages higher than even 1941. How did this happen? Which policies allowed it? Which leaders turned a blind eye? These arent trends, theyre choices.West Bengals numbers dont just reveal population shifts. They record six decades of deliberate governance decisions.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை