உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாம்பன் புதிய பாலத்திற்கு என்னாச்சு? ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்து

பாம்பன் புதிய பாலத்திற்கு என்னாச்சு? ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன் கடலில் ரயில் பாலம் பலமிழந்த நிலையில், 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது. இதற்கு முன்பே 2020ல் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி துவக்கப்பட்டு, தற்போது 100 சதவீதம் பணிகள் முடிந்து டிசம்பரில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது.கடந்தாண்டு நவ.,13, 14ல் புதிய பாலத்தை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி ஆய்வு செய்ததில், பாலத்தின் இரும்பு கர்டர்கள் மற்றும் துாக்கு பாலத்தில் சில குறைகளை சுட்டிக்காட்டினார். இதனால் திறப்பு விழா தள்ளிப்போனது. பின் ரயில்வே அமைச்சகத்தின் ஐந்து பேர் குழு, ஜன., 10, 11ல் புதிய பாலத்தை ஆய்வு செய்தனர்.இதில், புதிய பாலம் மற்றும் துாக்கு பாலம் சீரமைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவித்தனர். நேற்று முதல் திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களின் காலி பெட்டிகள் முன்பு போல பராமரிப்புக்கு ராமேஸ்வரம் செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதையடுத்து, புதிய பாலம் விரைவில் திறக்கப்படும் என, பயணியர் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.இந்நிலையில், தண்டவாளத்தில் அதிர்வு குறித்து ஆய்வு செய்யும் ரயில் இன்ஜினை பயன்படுத்தி ஜன., 16ல் பாம்பன் புதிய துாக்கு பாலத்தில் நான்கு முறை சோதனை ஓட்டம் நடத்தினர். அன்றிரவே திருப்பதி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்கு ராமேஸ்வரம் செல்லாது என, தெற்கு ரயில்வே அறிவித்தது.இதனால், பாம்பன் பாலம் திறப்பு விழா மீண்டும் இழுபறியில் உள்ளது. வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் லிப்ட் முறையில் இயங்கும் வகையில் வடிவமைத்த 620 டன் புதிய ரயில் துாக்கு பாலத்திற்கு என்னாச்சு என தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

JeevaKiran
ஜன 18, 2025 17:52

இதற்கு பதில், நூறு வருடங்கள் கடந்தும் இன்னும் கம்பீரமாக உள்ள பாலத்தை போலவே தூக்கு பாலம் அமைத்திருக்கலாம். இத்தனைக்கும் பழைய பாலம் கைகளாலேயே இயந்திரங்களை இயக்கி தூக்கி மூடும் படி அமைந்திருந்தது. இதே பாலத்தை இன்று உள்ள டெக்னாலஜி மூலம் மின்சாரத்தால் இயந்திரங்களை இயக்கி தூக்கி மூடும் படி அமைத்திருக்கலாம்.


Shekar
ஜன 18, 2025 17:21

திராவிடன் என்று சொள்ளிகொல்பவன் கொத்தடிமையாக இருப்பவன் என்பதை இங்குள்ள திராவிட கொத்தடிமைகள் கருத்து விவரிக்கிறது. இன்றோ, நாளையோ அந்த பாலம் அனைத்து சோதனைகளையும் முடித்து செயல்பட போகிறது. இவர்களோ வெள்ளைக்காரன் பாலத்தைப்பார், என்று இன்னும் வெள்ளைக்காரன் அடிவருடிகளாகவே உள்ளனர்.


subramanian
ஜன 18, 2025 16:07

பேசாமல் இதன் உயரத்தையும் சாலை பாலம் அளவிற்கு உயர்த்தி கட்டியிருந்தால் இவ்வளவு டிலே ஆகியிருக்க வாய்ப்பு இருந்திருக்காதோ?


கிஜன்
ஜன 18, 2025 11:37

ஐ.ஐ.டி ஸார்வாள் லட்சணம் இது தான் .... பக்கத்துலேயே நம்ம சமச்சீர் கல்வியாளர்கள் கட்டிய பேரூந்து பாலம் 37 வருடங்களாக கம்பீரமாகவும் ..... அதற்கடுத்து வெள்ளைக்காரன் கட்டிய பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கிறது ..... பெரு பெத்த பெரு .... தாகாதணிக்கு நீலு லேது ...


பாமரன்
ஜன 18, 2025 11:18

எனக்கு ஒரு சந்தேகம் ஜாமி... நம்மையெல்லாம் கொடுமை படுத்தற மாதிரி இந்த பாலத்தை கடக்க ரயிலுக்கும் டோல் போடுவாங்களா...??? எதுக்கும் டேக்ஸ் டெரரிஸ்ட் நிம்மி காதுல போட்டு வைப்போம்...


vivek
ஜன 18, 2025 13:58

இது பக்கா லகேகளு பா....இதுக்கு நூறு ரூபா குடுத்தா போதும்...நாள் ஃபுல்லா கூவும்


பாமரன்
ஜன 18, 2025 11:00

இது ஒரு சாதாரண பூச்சி பாலம்... இதுக்கே ஃபாரின் டெக்னாலஜியாம்... அப்பிடியும் அஞ்சு வருஷம் ஆகி இன்னும் முடிக்கலை... இந்த அழகில் நம்மை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு கட்டுமானத்தில் முன்னேறி போயிட்ட சீனாவை போட்டின்னு சொல்லிட்டு அலையுதுக பகோடாஸ்... கெரகம்டா... எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்


அப்பாவி
ஜன 18, 2025 10:32

அமச்சர் வந்து ஆய்வு செய்துட்டுப் போனாரே... தனுஷ்கோடி,, தூத்துக்குடி ந்னு உளறிட்டு கடைசீல மக்களுக்கு சரியா காது கேக்கலைன்னுட்டு போனாரே...


முருகன்
ஜன 18, 2025 09:27

நூறு வருடம் கடந்தும் கம்பிரமாக நிற்கும் தொழில்நுட்பம் எங்கே இவர்கள் புதிய முறையில் காட்டியதாக சொல்லும் தொழில் நுட்பம் எங்கே


Shivam
ஜன 18, 2025 07:34

சோனமுத்தா இன்னாச்சு பா? அமிச்சரு இன்னா சொல்ராரு? எதுனா சவுண்ட் வராத இடத்தில் இருந்து சவுண்ட் குடுக்க சொல்லு பா