உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எந்த கூட்டணியில் இணையலாம்: கருத்து கேட்ட தே.மு.தி.க.,

எந்த கூட்டணியில் இணையலாம்: கருத்து கேட்ட தே.மு.தி.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என, மாவட்ட செயலர்களிடம், வாக்கெடுப்பு முறையில், தே.மு.தி.க., தலைமை கருத்து கேட்டுள்ளது. சென்னை - கோயம்பேடில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், நேற்று, கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஜன. 9ம் தேதி, கடலுாரில் நடக்க உள்ள, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O' ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என, மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் கருத்தை, கடிதத்தில் எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள், தங்கள் கருத்தை எழுதி, பெட்டியில் போட்டனர். பின்னர், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி வைக்கலாம் என, மாவட்ட செயலர்களின் கருத்து கேட்கப்பட்டது. பெட்டியில் மாவட்ட செயலர்கள், கடிதம் வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில், ஜன. 9ம் தேதி கடலுாரில் நடக்கும் மாநாட்டில், எங்கள் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தேர்தலையொட்டி நிறைய அறிவிப்புகள் வரும். தமிழகத்தில் நான்கு முனை கூட்டணி உள்ளது. இதை தாண்டி இன்னொரு கூட்டணி வருமா எனத் தெரியாது. அனைத்து கட்சிகளும், தே.மு.தி.க., வுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. உரிய நேரத்தில், சரியான முடிவை அறிவிப்போம். அடுத்து வரும் ஆட்சியில், கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க., ஆட்சியை அகற்ற, ஒருமித்த கருத்துகளைக் கொண்ட கட்சிகள் இணைய வேண்டும் என, பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை, யார் ஏற்றுக் கொள்கின்றனர், யார் ஏற்கவில்லை என்பதற்கான விடை, கூட்டணி அமையும் போது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Sun
ஜன 06, 2026 19:51

கூட்டணி குறித்த உங்களது ஆசை வெட்ட வெளிச்சமாக எல்லோருக்குமே தெரியும். ஓவர் லோடு வாகனத்தில் ஏற முயற்சிப்பது சரியான முடிவல்ல. நீங்கள் கோரும் சீட்டில் வேறொருவர் ஏற்கெனவே அமர்ந்திருந்தால் உங்களை சப்தமில்லாமல் வண்டியை விட்டே கீழே இறக்கி விட்டு வண்டியை கிளப்பிச் சென்று விடுவார்கள். கடைசி நேரத்தில் வேறு வண்டியில் ஏறுவதும் கஷ்டமாகி விடும்.


Ram Prasath
ஜன 06, 2026 16:44

உங்க கட்சி கொள்கைக்கு ஒத்துபோகுற கூட்டணி னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லையா இருந்துருக்கும். கேப்டன் மேலே இருந்து கதறி அழுதுகிட்டு இருப்பாரு இந்நேரத்துக்கு.


visu
ஜன 06, 2026 16:04

இவங்க பிரச்சினை அதிக சீட்டும் செலவுக்கு பணமும் வேண்டும் திமுக ஏற்கனவே கூட்டணி கூட்டத்தில் தள்ளாடி கொண்டு உள்ளது போலும் பணம் வேணா கிடைக்கும் இதயத்தில் இடம் கொடுப்பாங்க தவேக அல்லது ADMK அணிதான் விஜயிடம் பணம் கிடைக்காது அதிக இடம் கிடைக்கும் வேற வழி இல்லை ADMK தான்


kulanthai kannan
ஜன 06, 2026 15:37

சிரிப்பு கட்சி


Sdeh
ஜன 06, 2026 14:48

நீங்க முடிவெடுத்து வரும் பொழுது தேர்தல் முடிந்துவிடும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 06, 2026 14:06

ஏற்கனவே ஆண்டாள் அழகர் கல்லூரியை கிட்னி கும்பலுக்கு வித்த போதே திமுக கூட கூட்டணின்னு முடிவாயிடுச்சே இப்போ என்னாத்துக்கு சும்மானாச்சுக்கும் ஒரு பில்டப்பு?


Gurumurthy Kalyanaraman
ஜன 06, 2026 13:04

மக்களாகிய நாங்கள் இந்த பக்கம் இருக்கிறோம் என்பதுதானே முக்கியம் மேடம்


angbu ganesh
ஜன 06, 2026 11:08

யாரும் உங்கள சேத்துபாங்களா மேடம்


Venugopal S
ஜன 06, 2026 10:58

நரி வலது பக்கம் போனால் என்ன, இடது பக்கம் போனால் என்ன?


c.mohanraj raj
ஜன 06, 2026 10:53

நீங்கள் எல்லாம் கட்சி நடத்தி நாடி என்ன ஆகப்போகுதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை