உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காலை சிற்றுண்டியில் உப்புமாவிற்குபதில் சாம்பாருடன் வெண் பொங்கல்; இன்று முதல் மெனுவில் மாற்றம்

காலை சிற்றுண்டியில் உப்புமாவிற்குபதில் சாம்பாருடன் வெண் பொங்கல்; இன்று முதல் மெனுவில் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் இனி திங்கள் தோறும் உப்புமாவிற்கு பதில் காய்கறி சாம்பாருடன் வெண் பொங்கல் என 'மெனு'வில் மாற்றம் செய்து இன்று முதல் அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதி பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 5 ம் வகுப்பிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு சத்தான உணவு காலையில் வழங்கும் நோக்கில் முதல்வரின் காலை உணவு திட்டம் 2022 செப்., 15 ல் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, மலைப்பகுதி பள்ளிகள் என 1,545 பள்ளிகள் தேர்வு செய்து 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் அன்று காய்கறி சாம்பாருடன் ரவை, கோதுமை, சேமியா, அரிசி உப்புமா ஏதேனும் ஒன்று வழங்கினர். செவ்வாய் காய்கறியுடன் கூடிய ரவை, சேமியா, சோளம், கோதுமை கிச்சடி, புதனன்று காய்கறி சாம்பாருடன் ரவா, வெண் பொங்கல், வியாழன்று மீண்டும் உப்புமா, வெள்ளியன்று ஏதேனும் இனிப்புடன் கிச்சடி வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உப்புமா வழங்குவதால் மாணவர்களிடம் உரிய வரவேற்பு இல்லை.

சிற்றுண்டி 'மெனுவில்' மாற்றம்

இந்நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான (2025- 2026) வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதனால் காலை உணவு திட்டத்தில் சிறு மாற்றம் செய்து சமூக நலத்துறை கமிஷனர் ஆர். லில்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இனி திங்கள் தோறும் உப்புமாவிற்கு பதிலாக காய்கறி சாம்பாருடன் வெண் பொங்கல் வழங்க வேண்டும். இத்திட்டத்தை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட விரிவாக்கம் எப்போது?

ஜூன் 3 முதல் அனைத்து அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கும் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர். இதற்காக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் சமையல் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். ஆனால் திட்ட விரிவாக்கம் செயல்பாடு குறித்து அரசு அறிவிக்கவில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ManiK
ஜூன் 02, 2025 19:15

கமல், உதவா மாதிரி மதம்மாறிய அறிவுஜீவிகள் - வெண்பொங்கல் பெருமாள் கோவிலை ஞாபகப்படுத்தும் என்பதால் உடனே இதை மாற்றி சொரியானியை கொடுக்க வேண்டும்னு சொல்லுவானுங்க.


எஸ் எஸ்
ஜூன் 02, 2025 13:05

வெண்பொங்கலுக்கு sleeping dose என்று ஒரு பெயர் உண்டு.. நன்றாக இருந்தாலே ஒரு கரண்டிக்கு மேல் சாப்பிட முடியாது.


angbu ganesh
ஜூன் 02, 2025 12:37

நீங்க திருண்டவே மாட்டீங்க தேர்தல் நெருங்க நெருங்க இந்த முன்னேற்றம் பேசாம மண்டேலா படம் மாதிரி உங்கள பண்ணனும்னு நினைக்கறேன்


Ramesh Sargam
ஜூன் 02, 2025 12:19

சாதாரணமாக பொங்கல் சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும் என்று சொல்வார்கள். மாணவர்கள் பொங்கல் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டால் எப்பொழுது படிப்பார்கள்? யாருடைய யோசனை இந்த பொங்கல் உணவு?


அப்பாவி
ஜூன் 02, 2025 11:15

வெண்பொங்கலோ உப்புமாவோ சாப்புட்டா நல்லா தூக்கம் வரும். சொந்த அனுபவம்.


RAAJ68
ஜூன் 02, 2025 10:27

இந்தக் குழந்தைகளை பார்த்தால் பாவமாக உள்ளது. லட்சம் கோடிகள் கொள்ளை அடிக்கிறார்கள் ஆனால் வேலைக்கு குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியவில்லை. பள்ளிக்கூடம் சென்று தான் உணவு சாப்பிட வேண்டும் என்ற நிலை மாற வேண்டும்.


Suresh sridharan
ஜூன் 02, 2025 10:23

இதற்கு பதிலாக அவர்கள் வீட்டிலே பழைய சோறு சாப்பிடலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை