உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பார்லி., நிலைக்குழு தலைவர் பதவி யாருக்கு? தி.மு.க., - எம்.பி.,க்களிடையே எதிர்பார்ப்பு!

பார்லி., நிலைக்குழு தலைவர் பதவி யாருக்கு? தி.மு.க., - எம்.பி.,க்களிடையே எதிர்பார்ப்பு!

பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவிக்கான பெயர்களை பரிந்துரை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.,வுக்கு கிடைக்கப்போகும் நிலைக்குழு தலைவர் பதவிக்கு, அக்கட்சித் தலைமை யாரை பரிந்துரை செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பார்லிமென்டில் நிலைக்குழு தலைவர் பதவி மிக முக்கியமானது. நிலைக்குழு தலைவருக்கு, மத்திய அரசின் ஒவ்வொரு துறை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் சம்மன் செய்ய உரிமை உண்டு.அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, துருவி துருவி கேள்விகளும், சந்தேககங்களும் எழுப்பி நெருக்கடியை தர முடியும். இத்தனை முக்கியத்துவமும், கவுரவமும் வாய்ந்த இந்த பதவிகளை கைப்பற்றுவதில், அரசியல் கட்சிகளிடையே போட்டா போட்டி இருப்பது வழக்கம்.எம்.பி.,க்களின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் இந்த பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றாலும், இதற்கென்று விதிமுறைகள் ஏதும் இல்லை. ஆளுங்கட்சியின் கடைக்கண் பார்வை இருந்தால் போதும்; பதவிகளை கணிசமாக கைப்பற்றலாம். நிதி, உள்துறை மற்றும் பொதுக் கணக்கு குழு தலைவர் ஆகிய மூன்று நிலைக்குழுக்கள் தான் முக்கியமானவை.இந்த மூன்று தலைவர் பதவிகளும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவது மரபு. ஆனாலும், கடந்த ஆட்சியில் பா.ஜ.,வே வைத்துக் கொண்டது. பொதுக் கணக்கு குழு மட்டும் காங்.,கிற்கு தரப்பட்டது.இம்முறையும் நிதி மற்றும் உள்துறை ஆகிய இரண்டையும் பா.ஜ.,வே வைத்துக் கொள்ள முடிவு செய்தால், பொதுக் கணக்கு குழுவுக்கு ராகுல் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபாவின் கீழ் 16 நிலைக் குழுக்களும், ராஜ்யசபாவின் கீழ் எட்டு நிலைக் குழுக்களும் உள்ளன. இந்த 24 நிலைக் குழுக்களுக்கும் தலைவர் பதவிகளை நியமிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ஒதுக்கீடு செய்யப்படும் இந்த குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு, எம்.பி.,க்களின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலகங்களில் இருந்து, அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 17ம் தேதிக்குள் எம்.பி.,க்களின் பெயர்களை தரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.எண்ணிக்கையின் அடிப்படையில் சமாஜ்வாதி, திரிணமுல் மற்றும் தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவி உறுதியாக கிடைக்கும். அவ்வாறு தி.மு.க.,வுக்கு கிடைக்கப்போகும் அந்த ஒரு லோக்சபா நிலைக்குழு தலைவர் பதவியை கைப்பற்றப்போவது கனிமொழியா அல்லது டி.ஆர்.பாலுவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்னென்ன வசதி கிடைக்கும்?

ஆளும் தரப்புக்கு எப்படி கேபினட் அமைச்சர் பதவிகளோ, அதற்கு நிகரான வகையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு இந்த பதவிகள் என்பது கவுரவமான விஷயம். நிலைக்குழு தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு, பார்லிமென்டில் தனியாக அலுவலகம் தரப்படும். அங்கு போன் வசதி மற்றும் வீட்டிலும் கூடுதலாக ஒரு போன் வசதி தரப்படும்.தவிர, இரண்டு செயலர்கள் வைத்துக் கொள்ளலாம். இரண்டு மெசஞ்சர்களையும் நிலைக்குழு தலைவர் நியமித்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அரசு திட்டங்களை ஆய்வு மேற்கொள்ளலாம்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Maheesh
ஜூலை 12, 2024 18:18

யார் நன்றாக திமக நாடகங்களை பாராளுமன்றத்தில் யார் நன்றாக அரங்கேற்றவார்களோ அவர்களுக்குதான் கிடைக்கும். தமக்கைக்கு போகவில்லை என்றால் தமக்கை ஓரம்கட்டப்பட்டார் என்று அர்த்தம் அல்லது டிரபா நிர்வகிக்கும் கட்சி சொத்து பெரும் மதிப்பானதாக இருக்கலாம்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 12, 2024 14:59

திமுக MP க்கள் தேசிய நலன் சார்ந்த பிரச்சனைகளை எழுப்ப மாட்டார்கள். தேவையற்ற இந்து விரோத பிரச்சனை, சிறுபான்மையினரை முட்டு கொடுக்க என்று பாஜகவுக்கு எதிராக ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள். ஆகையால் எந்த பதவிக்கும் தகுதி இல்லாதவர்கள்.


PARTHASARATHI J S
ஜூலை 12, 2024 11:12

பாஜக அதை வேறு கட்சிகட்கு தரனும். திமுகவினர் ஆளும் கட்சிக்கு பெரிய குடைச்சல் தருவார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:07

ஹிந்தி தெரியாமல் நாடு முழுவதும் பயணம் சென்று என்ன செய்வார்கள்? பஜ்ஜி போண்டா பக்கோடா சாப்பிடுவது மட்டுமே .


மோகனசுந்தரம்
ஜூலை 12, 2024 08:23

நம்முடைய தமிழக முதல்வரின் இந்த சிரிப்பு ஆஹா ஆஹா ஆஹா ஆஹா


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜூலை 12, 2024 07:04

டி.ஆர்.பாலு டெல்லி அரசியலில் இருந்து படிப் படியாக ஓரம் கட்டப்பட்டு வருகிறார் வேற யாரு? வழக்கம் போல கட்டுமர வாரிசான கனிமொழிக்குத்தான் அந்த பதவி கிடைக்கும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ