உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்டாய கல்வி உரிமை தொகையை மாநிலங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?: கேட்கிறது உச்சநீதிமன்றம்

கட்டாய கல்வி உரிமை தொகையை மாநிலங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?: கேட்கிறது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றால், மாநில அரசு அந்த தொகையை செலுத்த வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஏழைக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். 'தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்கக்கை நடத்தப்படவில்லை' என, ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பதாக தமிழக அரசு வாதிட்டது. இதை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 'மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளுக்கான கட்டாய கல்வி உரிமைக்கான கட்டணங்களை மாநில அரசு தன் நிதியிலிருந்து வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''கடந்த 2021 -- 22ம் நிதியாண்டில் இருந்து தற்போது வரை கட்டாய கல்வி நிதிக்காக, 153 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 342 கோடி ரூபாயை இன்னும் விடுவிக்காமல் இருக்கிறது. ஏற்கனவே இதே போன்று நிதி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,'' என, வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசு மற்றும் எதிர்மனுதாரரான ஈஸ்வரன் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர் - டில்லி சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Tetra
செப் 16, 2025 23:14

திட்டத்தை அதன் வழி செலவழிக்காமல் துணை கொடு நான் செலவழிக்கிறேன் என்றால், அப்பன் சில ஊர் ஊரா வக்க பணம் இருக்கும்‌. நர்ஸ்க்கு கொடுக்க இல்லையா. எல்லாமே மத்திய அரசுதான் செய்யணும்னா மாநில அரசு எதற்காக? வரிப்பணத்தை கொள்ளை அடிக்கவா. இது நீதி மன்றம் இல்லை. கபாலி சிப்பல் அசிங்வி நடத்தும் மன்றம்


NAGARAJAN
செப் 10, 2025 06:51

இது தான் ஓரவஞ்சனை மத்திய அரசு ஆயிற்றே. . பாஜக ஆளும் மாநிலங்களுக்கு குறை வைக்க மாட்டார்கள்


ManiMurugan Murugan
செப் 02, 2025 23:35

அரசியல்வாதிகள் முக்கியமாக அயர்லாந்து திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி அவர்கள் சொந்த பள்ளி களுக்கு மானிய த் தொகை பெறாமலா நிர்வாகம் செய்வார்கள்


ManiMurugan Murugan
செப் 02, 2025 23:32

எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறவேண்டும் என்றால் முதலில் அந்த திட்டத்தின் அம்சங்களை படித்து அதில் உள்ளவற்றை விவாதித்து மக்கள் நலனில் அக்கறை க் கொண்டு கட்சி சொந்த குடும்ப நலனை கடந்து செயல்பட வேண்டும் திட்டத்தையே ஏற்க்காமல் பணம் வேண்டும் என்றால் யார் தருவார்கள்


Tamilan
செப் 02, 2025 22:02

யாரும் அவர்களை கேள்வி கேட்க முடியாது என்று வாதாடும் சர்வாதிகார அரசு


Ganapathy
செப் 02, 2025 21:50

எதுக்கு கொடுக்கணும்?..உங்க பணக்கட்டு ஊழல் நீதிபதி மேல ஏன் முதல் விசாரணை அறிக்கை போட போலீசை தடுக்கறீங்க?


K.n. Dhasarathan
செப் 02, 2025 21:02

உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் தீர்ப்புகள் ஏன் மாறுகின்றன ? நீதிபதிகள் மேலோட்டமாக படித்து, பிரச்சினைகளை ஆராயாமல், மூல காரணம் கண்டுபிடிக்காமல் தீர்ப்புகள் சொல்வது சரி இல்லை.


Anu Sekhar
செப் 02, 2025 20:15

திமுக தான் வடிகட்டினவர்கள் என்றால் நீதிபதிகளுமா ? கான்ட்ராக்ட் படித்து பார்கணும் . கண்டிஷன்ஸ் பூர்த்தி செய்ய சொல்லவும். கோர்ட் நேரத்தை வீணாக வேண்டாம்.


Rathna
செப் 02, 2025 19:25

மத்திய அரசு வழங்கும் பணம் அதிகாரம் உள்ளவர்களின் பைக்கு செல்வது நாடு முழுவதும் மிக சாதாரணம். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் நிதியில் நடக்கும் முறைகேடு இன்னும் அதிகம். இவற்றை கேள்வி கேட்டால், எனக்கு தேவைப்படும் பணம் வழங்கவில்லை என்பது மிக சாதாரணமான குற்றச்சாட்டு. இதில் அரசியல், நீதி வழங்கும் இடத்தில கூட விளையாடுவது ஒண்ணும் வியப்பில்லை.


Venugopal S
செப் 02, 2025 13:27

மளிகைக் கடை செட்டியாரிடம் பருப்பு இருக்கிறதா என்று கேட்டால் அரிசி இருக்கிறது என்பார், அவர் சம்பிரதாயப்படி கடையில் ஒரு பொருள் இல்லை என்று சொல்லக்கூடாதாம். மத்திய பாஜக அரசு கல்வி நிதியை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டால் பட்டியலின முன்னேற்ற நிதியை தமிழகம் செலவு செய்யவில்லை என்று சொல்வது அது போலவே உள்ளது!


ஆரூர் ரங்
செப் 02, 2025 15:50

நான் கேட்டது என்ன? கொடுக்கபட்ட நிதியையே பயன்படுத்தாமல் திருப்பியனுப்பும் அரசுக்கு மேலும் மேலும் நிதி கொடுக்க வேண்டுமா?


vivek
செப் 02, 2025 16:10

உன் சமச்சீர் அறிவுக்கு கொடுத்த நிதியே போதும்


சந்திரன்
செப் 03, 2025 11:48

பொருந்தாத கருத்து. நிதி தருபவன் ஓசியிலயா தருவான். அவன் போடுகிற நிபந்தனைகளுக்கு உட்படனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை