உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு?

செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, 'ஒய் பிரிவு' பாதுகாப்பு வழங்குவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலருடன் டில்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவர் தமிழகம் திரும்பிய நிலையில், கடந்த 28ம் தேதி, அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன், தனியே டில்லி சென்றார். அங்கு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, செங்கோட்டையன் தனக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது. மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகள், செங்கோட்டையனுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விசாரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
மார் 31, 2025 14:46

இதெல்லாம் உனக்கே அதிகமாகத் தெரியலையா?


Mahendran Puru
மார் 31, 2025 12:43

அதெல்லாம் செய்ய வேண்டியது தான். அடிமைகளுக்காக ஏற்பட்டது தானே எக்ஸ், ஒய், இஜட் எல்லாம்.


Haja Kuthubdeen
மார் 31, 2025 11:18

செங்கோட்டையனை நம்பி எல்லாம் யாரும் இல்லை.....வீன் முயற்சி.


M R Radha
மார் 31, 2025 17:55

அதிமுகவுக்கு சரியான தல தினகரன்தான். ஸ்டாலினுடைய எடுபுடி எப்ஸ். கொடநாடு கொலை வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்தால் எப்ஸ் களி தின்னுவது உறுதி


தேவதாஸ் புனே
மார் 31, 2025 10:25

மஹாராஷ்டிராவின் சிவசேனா போல் தமிழக திமுக மற்றும் அதிமுக மாறும். ஸ்டாலின் மற்றும் எடப்பாடியின் தூக்கம் போச்சு.......


மணி
மார் 31, 2025 04:45

இவனா .M.G.R. விசுவாசி கபடதாரி. இவன் எல்லாம் வெளியே தொலவைதே நல்லது. அரசியலில் நீ காண போய் ஒரு நாயும் உன் பின் வராது


நிக்கோல்தாம்சன்
மார் 31, 2025 04:25

எடப்பாடியை எதிர்த்தால் y பிரிவா , அவ்ளோ பெரிய அப்பாடக்கரா எடப்பாடி ?


சமீபத்திய செய்தி