வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போல் பேசி அரசியலில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார். அடுத்த குருமா அவர் தான். கூண்டோடு நசுக்கப்பட வேண்டிய திமுக விசி கட்சிகள்.
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் அருகில், வி.சி., தலைவர் திருமாவளவன், சமீபத்தில் காரில் சென்றபோது, பைக்கில் சென்ற ஒருவருடன், அவரது கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் திருமாவளவனுக்கு எதிராக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, வி.சி.க.,வினர், அண்ணாமலைக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வி.சி., நிர்வாகி ஒருவர், அண்ணாமலைக்கு மிரட்டல் விடுத்த 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது. அதில், அந்த நபர் பேசியிருப்பதாவது:
வாழ்க்கையை தொலைத்து, எங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன்; அவருக்கு ஏதேனும் ஒன்று என்றால், தமிழகமே இயங்காது. பா.ஜ.,வினர் ஓட்டு கேட்டு எங்கள் தெருவுக்கு தான் வர வேண்டும். ஊர் ஊருக்கு ஒருத்தராவது, வி.சி.,யை சேர்ந்தவர் இருப்பார். ஒருவராவது அண்ணாமலையை செருப்பை கழற்றி அடிப்பார். மதுரையில் பா.ஜ., வினர் ஒருவர் கூட வேஷ்டி கட்டி நடக்க முடியாது. திருமாவளவனை எதிர்த்து, நீ எங்கும் அரசியல் செய்ய முடியாது. நீ எங்கும் இனிமே நடக்க முடியாது. மோடி கார் எங்கு வந்தாலும் மறிக்க வேண்டும். அப்ப தான் அவர்களுக்கு வி.சி.க., அருமை தெரியும். 'திருமாவளவனுக்கு எதற்கு இசட் பிரிவு பாதுகாப்பு' என்று கேட்கிறான். டேய் முட்டாள் பயலுகளா, நீ சுதந்திரமாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றால், திருமாவளவன் சுதந்திரமாக இருக்க வேண்டும். அப்ப தான் நீ தீபாவளி கொண்டாட முடியும். இல்லையெனில் ஒரு பயலும், எங்கும் வண்டி கட்டி போக முடியாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இது போல் பேசி அரசியலில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார். அடுத்த குருமா அவர் தான். கூண்டோடு நசுக்கப்பட வேண்டிய திமுக விசி கட்சிகள்.