உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,வுக்கு பூஜ்ஜியம் அ.தி.மு.க.வுக்கு ராஜ்ஜியம்

தி.மு.க.,வுக்கு பூஜ்ஜியம் அ.தி.மு.க.வுக்கு ராஜ்ஜியம்

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார் பழனிசாமி. தி.மு.க.,வால் இந்தக் கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பீர்களா... தனித்த ஆட்சியை அமைப்பீர்களா... என கேட்டு வருகின்றனர். தி.மு.க.,வுக்கு இப்படியொரு பயத்தை உண்டு பண்ணியிருப்பதில் இருந்தே, வரும் 2026ல், அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. முதல்வர், இப்போதே 2026 பயத்தில், ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். மாநில சுயாட்சி, நீட், மும்மொழி, கச்சத்தீவு என சட்டசபையில் தீர்மான நாடகம் போடுகிறார் முதல்வர். ஏற்கனவே, கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி அழகிரி, தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கினார். மாநில சுயாட்சியோடு தான், ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சி செய்தது. 2026 தேர்தலில் தி.மு.க.,வுக்கு பூஜ்யமும், அ.தி.மு.க.,வுக்கு ராஜ்யமும் கிடைக்கும். உதயகுமார், முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

முருகன்
ஏப் 20, 2025 20:00

இன்னும் பழைய அதிமுக என்ற நினைப்பு வரும் தேர்தலில் கிடைக்கும் தோல்வி பேச முடியாத நிலை ஏற்படும்


Oviya Vijay
ஏப் 20, 2025 09:36

இந்த தடவை மதுரைல ஒரு தொகுதியில கூட அதிமுக ஜெயிக்காது... உங்களுக்கும் செல்லூர் ராஜுவுக்கும் இந்த தேர்தலோட ஓய்வு கொடுக்கப் போறாங்க... பாவம்... ரொம்ப உழைச்சு நல்ல காசு பார்த்து டயர்டாகி இருப்பீங்க... எலெக்ஷனுக்கு அப்புறம் நிம்மதியா ரெஸ்ட் எடுங்க...


pmsamy
ஏப் 20, 2025 06:26

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி நல்ல பஞ்சு டயலாக்


சமீபத்திய செய்தி