உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுய உதவிக் குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்தா#வு கூட்டம்

சுய உதவிக் குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்தா#வு கூட்டம்

வில்லியனூர் : எம்.எஸ்.சாமிநாதன் உயிர் மையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பிள்ளையார்குப்பம் எம்.எஸ்.சாமிநாதன் உயிர் மையம் சார்பில் சுய உதவிக் குழு கூட்டமைப்பான இன்னுயிர் கிராம சங்க பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டம் வில்லியனூர் சரஸ்வதி மஹாலில் நடந்தது.இன்னுயிர் கிராம சங்க தலைவி ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கிருஷ்ணவேணி வரவேற்றார். புதுச்சேரி நகராட்சி திட்ட அலுவலர் சகுந்தலா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ரவிபிரகாசம், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீபதி கல்குரா, வில்லியனூர் இந்தி யன் வங்கி மேலா ளர் சக்திவேல், சென்னை எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் சுதா நாயர் ஆகியோர் மகளிருக்கான பல்வேறு தொழில் முனையும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.கருத்தரங்கில் 500க்கும் மேற்பட்ட இன்னுயிர் கிராம சங்க சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை