மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
53 minutes ago
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
3 hour(s) ago | 32
புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இலவச ரொக்க கூப்பன் உள்ளிட்ட நல உதவிகளை வழங்க வேண்டும் என தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழு சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடந்தது. தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மண்டல தலைவர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விழாக்கால இலவச ரொக்க கூப்பன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வுக்கும், இலவச கூப்பன் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டினை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, இலவச ரொக்க கூப்பன் உள்ளிட்ட அனைத்து நல உதவிகளையும் வழங்க முப்படை நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், கோவிந்தசாமி, ரங்கபாஷியம், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் கோபி நன்றி கூறினார்.
53 minutes ago
1 hour(s) ago | 8
3 hour(s) ago | 32