உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா நகர் காங்., வேட்பாளரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்

இந்திரா நகர் காங்., வேட்பாளரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்

புதுச்சேரி : சாலை, கழிவு நீர், தெரு மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று காங்., வேட்பாளரிடம் பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இந்திரா நகர் இடைத் தேர்தலில் காங்.,வேட்பாளர் ஆறுமுகத்திற்கு தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்தது. இதை தொடர்ந்து, காந்தி திருநல்லூர் பகுதியில் காங்., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடந்த பிரசாரத்தை தி.மு.க.,அமைப்பாளர் ஜானகிராமன் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பிரசாரத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், காங்., தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர் ஆறுமுகம் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். காந்திதிருநல்லூர் மேட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர் வேட்பாளரிடம்' காந்திதிருநல்லூர் நுழைவாயில் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆசிட் கெமிக்கல் கம்பெனியிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நச்சுக்காற்றால் மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியில் விடாமல் உள்ளேயே வைத்திருப்பதாக கூறினர். தொடர்ந்து தங்கள் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை, சாலை வசதிகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் இல்லை என்று புகார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ