உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

புதுச்சேரி : அம்மா சமூக சேவை மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம், முத்தியால்பேட்டையில் நடந்தது.ஜிப்மர் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன், செயின்ட் சிமோன்பேட்டையில் உள்ள அம்மா சமூக சேவை மைய அலுவலகத்தில் நடந்த முகாமை, முதல்வரின் பார்லிமென்ட் செயலாளர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முகாமில், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். சேவை மையத் தலைவர் இளங்கோவன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் கண்ணம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கவும், கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ