உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., பிரசாரம்

இந்திய கம்யூ., பிரசாரம்

புதுச்சேரி : என்.ஆர். காங்., வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூ., கட்சியினர் ஓட்டு சேகரித்தனர். இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூ., என்.ஆர்., காங்., கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையொட்டி இந்திய கம்யூ., நிர்வாகிகள் இந்திரா நகர் தொகுதியில் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.இந்திய கம்யூ., தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன், மாநில செயலாளர் நாரா. கலைநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் கோவிந்தன்பேட்டையில் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். செயற்குழு உறுப்பினர் சேது செல்வம், தொகுதி செயலாளர் கண்ணன், துணை செயலாளர் விசுவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ