உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறுநாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு

நுாறுநாள் வேலை திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு

வில்லியனுார் : கிராமப்புற மக்களின் நலன் கருதி மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சார்பில் நுாறு நாள் வேலை வழங்கி வருகிறது.அதன்படி மங்கலம் தொகுதியில் ரூ. 1:70 கோடி செலவில் திருக்காஞ்சி பகுதியில் உள்ள தாங்கல், சாத்தமங்கலம் ஏரி, பங்கூர் ஏரி, மங்கலம் கிராமதாங்கல், உருவையாறு ஏரி, கோட்டைமேடு சங்கராபரணி ஆற்றங்கரை பகுதி பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் வில்லியனுார் வட்டரா வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rajasekaran
ஜூலை 18, 2024 11:25

இதற்கு சம்பளம் வழங்குவது மத்திய அரசு. கிராமத்தில் வேலை செய்யும் மக்கள் எல்லோருக்கும் இது தெரியாது. தமிழ்நாடு அரசு தான் சம்பளம் கொடுக்கிறது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ