| ADDED : ஏப் 04, 2024 11:06 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மது பாட்டில்களை வழங்குவதை தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு உச்சிமேடு பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, போலீசாரை பார்த்த நபர் ஒருவர் அவர் வைத்திருந்த சாக்கு பையை கீழே போட்டு விட்டு பைக்கில் தப்பி சென்றார். பையை சோதனை செய்தபோது அதில் 500 மில்லி அளவுள்ள 20 சாராய பாட்டில்கள் இருப்பதும், அதனை தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.இதையடுத்து 10 லிட்டர் சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். தப்பி ஓடிய நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.