உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் இடமாற்றம்

163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் இடமாற்றம்

புதுச்சேரி: பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் 163 பாலசேவிகா கவுரவ ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். புதுச்சேரி அரசு முன்மழலையர் பள்ளிகளில் பாலசேவிகா கவுரவ ஆசிரியர்களை நியமித்து பள்ளி கல்வித் துறை சமாளித்து வருகிறது. பல ஆண்டுகளாக பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதற்கிடையில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் பணியாற்றும் 163 பாலசேவிகா ஆசிரியர்களை பள்ளி கல்வித் துறை இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பள்ளி கல்வித் துறை நிர்வாக துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை