மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை 8 பேர் கைது
01-Jun-2026
போதையில் ரகளை செய்த நால்வர் கைது
13-Jun-2026
புதுச்சேரி: புதுச்சேரியில், பொது இடங்களில் ரகளை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் உதவி சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். மேரி உழவர்கரை குண்டுசாலை எம்.ஜி.ஆர்., வளைவு அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசி ரகளை செய்து கொண்டிருந்த தர்மாபுரி வின்சென்ட்,40, என்பவரை கைது செய்தனர். அதேபோல், சின்னையாபுரம் குபேர பாடசாலை பகுதியில், நேற்று முன்தினம் இரவு பொது இடத்தில் ரகளை செய்து கொண்டிருந்த முத்தியால்பேட்டை விநாயகமூர்த்தி,28; என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். காலாப்பட்டு தனியார் பார் அருகில் உள்ள காலி இடத்தில், நேற்று முன்தினம் காலை ரகளை செய்த கீழ்புத்துப்பட்டு, மொன்னையன்பேட்டை சண்முகம்,46; என்பவரை காலாப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
01-Jun-2026
13-Jun-2026