மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று பேரிடம் 1.15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என, அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர், பணம் பரிவர்த்தனை அதிகமாக உள்ளது. அதற்காக விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என, கூறினார். அதற்கு பயந்து பாஸ்கர் 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.ராஜ் என்பவர் மசாஜ் செண்டர் விபரங்கள் குறித்து, இணைய தளத்தில் தேடினார். அதில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய நபர், முன் பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார். அதை நம்பி, அவர் 42 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்தவர் காயத்திரி. இவரது கணவரின் பெயரில் போலி பேஸ் புக் கணக்கு துவக்கிய மர்ம நபர் ஒருவர், காயத்திரியிடம் அவசரத்திற்கு பணம் தேவைப்படுவதாக, தகவல் அனுப்பினர். அதை நம்பி, அவர், 23 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago