உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடந்த காங்.,அரசால் மக்கள் வரிப்பணம் ரூ.400 கோடி விரயம்; மாஜி எம்.எல்.ஏ., சாமிநாதன் குற்றச்சாட்டு

கடந்த காங்.,அரசால் மக்கள் வரிப்பணம் ரூ.400 கோடி விரயம்; மாஜி எம்.எல்.ஏ., சாமிநாதன் குற்றச்சாட்டு

புதுச்சேரி : புதுச்சேரியில், கடந்த கால காங்., அரசு, 5 ஆண்டுகளில், 400 கோடிக்கு மேல் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்துள்ளதாக,முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் கடந்த கால காங்., ஆட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சமீபத்தில் விஷ வாயு தாக்கி, மூன்று பேர் இறந்த சம்பவத்திற்கு, காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் ஆய்வு செய்த இன்ஜினியர்கள் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும், அரசு ஆய்வு செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதைய காங்., அரசு விடுத்த டெண்டர் தொகை மற்றும் தரமற்ற கட்டுமான வேலைகள் என கடந்த காங்., அரசால் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், மிகப்பெரிய ஊழலால் தோல்வி அடைந்துள்ளது. கடந்த கால காங்., ஆட்சியில் அனைத்து துறையிலுமே ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்துள்ளது. கவர்னர் இது சம்மந்தமாக, வல்லுநர்கள் குழு அமைத்து, அனைத்து பகுதிகளிலும், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு காங்., ஆட்சியில் 400 கோடிக்கு மேல் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பத்துக்கண்ணு, ஊசுட்டேரி, பாகூர் போன்ற ஏரிகள், கால்வாய்கள் கட்டிய முறைகள் குறித்து, ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ