மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
10 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
10 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
10 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
10 hour(s) ago
புதுச்சேரி : மின்விநியோக கட்டமைப்பு 404 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.பட்ஜெட்டில் மின் துறை குறித்த முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:புதுச்சேரியின் மின் விநியோகம் மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் 83.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான செலவில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக பெற உள்ளது.மேலும் 404.19 கோடி மதிப்பீட்டில் தற்போதுள்ள மின்விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்தவும், புதுப்பிக்கவும், திறனை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, விரைவில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.தவளக்குப்பத்தில் 110/22 கே.வி., துணை மின் நிலையம் நிறுவப்படும். லாஸ்பேட்டையில் புதிய வாயு காப்பு துணை மின் நிலையம் அமைக்கப்படும். இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் வில்லியனுார், காலாப்பட்டு, கோர்க்காடு, திருபுவனை, தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையங்களின் திறன் 45.02 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இந்த பணிகள் அடுத்தாண்டு டிசம்பரில் முடியும். 73 இளநிலை மின் பொறியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வில்லியனுார், தொண்டமாநத்தம் துணை மின்நிலையங்களின் 20 கோடி மதிப்பில், கூடுதலாக 230/110 கே.வி., திறன் கொண்ட மின் மாற்றிகள் நிறுவப்பட்டு, அதனை சார்ந்த மின் வழித்தடங்கள் அமைக்கப்படும்.21.64 கோடி மதிப்பில் வெங்கட்டா நகர் துணை மின்நிலையத்தில் இருந்து ஜிப்மர் வளாக வாயு காப்பு துணை நிலையம் வரை புதை மின்வடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் துறைக்கு பட்ஜெட்டில் 2801.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago