உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 மாநில சைபர் குற்றங்கள் குறித்து புதுச்சேரியில் கருத்தரங்கம்

7 மாநில சைபர் குற்றங்கள் குறித்து புதுச்சேரியில் கருத்தரங்கம்

புதுச்சேரி: ஏழு மாநிலங்களின் சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் புதுச்சேரியில் நடந்தது.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சைபர் பாதுகாப்பு வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பிற்காக ஏழு மாநிலங்கள் அடங்கிய குழுவினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவின் சைபர் குற்றங்கள் குறித்த பயிலரங்கம் புதுச்சேரி செண்பகா ஓட்டலில் நேற்று நடந்தது. தலைமை செயலர் சரத்சவுகான் தலைமை தாங்கினார். மத்திய உள்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலர் சுந்தரி நந்தா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கருத்தரங்கில் இணைய தொழில்நுட்ப நிபுணர்கள் பேசியதாவது:ஆரம்பத்தில் பணம் பறிப்பதற்காக நடந்த இணையதளக் குற்றங்கள், இன்று நாடுகளுக்கிடையே நடக்க ஆரம்பித்திருக்கும் இணையதளப் போராக அதாவது சைபர் வாராக மாறியிருக்கின்றன. எந்த அளவுக்கு இணையத் தொழில்நுட்பமும் இணையதளப் பயன்பாடும் முன்னேறி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த நாசகார சைபர் தொழில்நுட்பங்களும் வளர்ந்து இருக்கின்றன. சைபர் குற்றவாளிகளை விட்டு, அரசின் தகவல்களை திருடுகின்றன. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளின் இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. எனவே இணை யதளத்தில் நவீன பாதுகாப்புகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்' என்றனர்.மேலும், அரசின் முக்கிய உட்கட்டமைப்புகளை கட்டுப்படுத்தும் கணினிகள், சர்வர்கள் போன்றவை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க அவற்றின் குறை நிறைகள் மற்றும் செயல் திறன் ஒவ்வொரு காலாண்டிலும் விரிவாக ஆராயபட்டு தேவையான சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் மாற்றங்கள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை