உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அன்னை சிவகாமி அரசு பள்ளி பிளஸ் 2 தேர்வில் 91.06 சதவீதம் தேர்ச்சி

அன்னை சிவகாமி அரசு பள்ளி பிளஸ் 2 தேர்வில் 91.06 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 91.06 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில் பயின்ற 235 மாணவிகளில் 214 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் லீனா ரோஸ்மேரி, சிவகாமசுந்தரி, தீக் ஷா ஆகியோர் கம்யூட்டர் சையின்ஸ் தேர்வில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆங்கிலம், இயற்பியல், உயிரியல், கம்யூட்டர் சையின்ஸ், மனைவியல் மற்றும் ஜவுளி ஆடை வடிவமைப்பு பாடங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் மற்றும் கம்யூட்டர் சையின்ஸ் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் எழில் கல்பனா பாராட்டி கவுரவித்தார்.அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை