உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தபால் ஓட்டுப் போட்ட 104 வயது மூதாட்டி

தபால் ஓட்டுப் போட்ட 104 வயது மூதாட்டி

காரைக்கால் : காரைக்கால், திருப்பட்டினத்தில் 104 வயதான மூதாட்டி தபால் ஓட்டளித்தார்.காரைக்கால் மாவட்ட தேர்தல்துறை சார்பில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது வீட்டில் இருந்தபடி தபால்ஓட்டளிக்க தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வீடு வீடாக நேரில் சென்று தபால் ஓட்டுக்களை பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 420 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.இதனிடையே நிரவி - திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 104 வயதான மூதாட்டி தபால் ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தேர்தல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி