| ADDED : ஜூன் 12, 2024 02:17 AM
வில்லியனுார் : வில்லியனுார் ஆட்டோ மெக்கானிக் கடையில், வேலை செய்த சிறுவனை தொழில்துறை அதிகாரிகள் மீட்டனர்.வில்லியனுார் விழுப்புரம் சாலையில் பரந்தாமன், ஆட்டோ மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்த கடையில் குழந்தை தொழிலாளர் ஒருவர் வேலை செய்வதை கடந்த 8ம் தேதி காலை புதுச்சேரி தொழிலாளர் துறையில் உதவி ஆய்வாளர்கள் மகேந்திரவர்மன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அவ்வழியாக சென்றபோது பார்த்தனர். அதனை தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அவர், 14 வயது சிறுவன் என தெரியவந்தது. சிறுவனை மீட்டு, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.இது குறித்து உதவி ஆய்வாளர் மகேந்திரவர்மன் வில்லியனுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுன்பேரில், குழந்தை தொழிலாளியை மெக்கானிக் கடையில் பணி அமரத்திய பரந்தாமன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.