மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago
நெட்டப்பாக்கம்: வங்கி நுழைவு வாயிலில் கார் புகுந்து விபத்து ஏற்பட்டதில், வாடிக்கையாளர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர். சென்னையைச் சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ் 27, இவர் நேற்று தனது நண்பருடன், டி.என்.05.ஏ.யு. 5926 பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் சென்னையில் இருந்து மடுகரை வழியாக நெட்டப்பாக்கம் அருகே உள்ள கலித்திரம்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.காரை விக்னேஷ் ஒட்டினார். மதியம் 2.30 மணியளவில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள புதுவை பாரதியார் கிராம வங்கி நுழைவு வாயிலில் அதிவேகமாக மோதி நின்றது.வாடிக்கையாளர்கள் வங்கி உள்ளே இருந்ததால் உயிர்சேதம் தவிர்கப்பட்டது. காரை ஒட்டிய விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் தப்பியோடி விட்டனர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காரை அப்புறப்படுத்தி, விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago