உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

காரைக்காலில் ஆட்டுக் குட்டிக்கு பால் கொடுத்த அதிசய நாயை பொது மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். காரைக்கால், பெரியபேட் பகுதியை சேர்ந்த சிம்சன் என்பவர் வீட்டில், அவரது மனைவி அனிதா ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன், அவர் வளர்த்த ஆடு ஒன்று மூன்று குட்டிகளையும், நாய் ஒன்று மூன்று குட்டிகளையும் ஈன்றுள்ளன.ஆடு மற்றும் நாய் ஒரே வீட்டில் வசிப்பதால் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் நாய்குட்டி தனது குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஆட்டுக்குட்டிகளுக்கும் பால் கொடுத்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நாய் ஆட்டுக் ்குட்டிக்கு பால்கொடுப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் திரண்டு பார்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை