உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

செவிலியர் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

வில்லியனுார்: இந்திராணி செவிலியர் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அரியூர் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் கீழே இயங்கும் இந்திராணி செவிலியர்கள் கல்லுாரியில் போதை பொருள் தடுப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கேர் மேக்ஸ் நிறுவனம் மற்றும் மாநில போதை பொருள் தடுப்பு இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வித்யா தலைமைதாங்கினார். செவிலியல் கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் டாக்டர் மல்லிகா, கேர் மேக்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் சூர்யா பிரசன்னா, மாநில புகையிலை தடுப்பு இயக்க திட்ட அதிகாரி டாக்டர் சூர்யாகுமார் மற்றும் தேசிய சுகாதாரத் திட்ட அதிகாரி டாக்டர் கவிப்பிரியா ஆகியோர் பங்கேற்று போதை பொருள் தடுப்பு குறித்து பேசினர். நிகழ்ச்சியில் செவிலியர் கல்லுாரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.கல்லுாரி போதை பொருள் தடுப்பு இயக்க செயலாளர் பேராசிரியர் விக்ரமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி