மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
7 hour(s) ago
உப்பளம் கல்லறையில் பல ஆயிரம் ஆன்மாக்கள் உறங்கி கொண்டு இருக்க, அதில் காதல் காவியம் பேசும் ஒரு பிரெஞ்சு இளம்பெண்ணின் ஆன்மாவை காண பல்வேறு ஆண்டுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.குறிப்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ஒவ்வொரு ஆண்டும் அந்த கல்லறையை தரிசிக்க மட்டுமே வரும் வெளிநாட்டினர்களும் உண்டு.அந்த பிரெஞ்சு இளம்பெண்ணின் பெயர் கிளேர் ஓ கொன்னேல். அனைவரையும் கல்லறையை நோக்கி ஈர்த்து கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் கதை மிகவும் சோகமானது; கனமானது.பெரிய செல்வந்தரின் மகளான கிளேர்ஓ கொன்னேல், பிரான்ஸ் நாட்டில் பிளேன் என்ற இடத்தில் பிறந்தவர்.கடல் கடந்து புதுச்சேரி வந்து, புதிய மண வாழ்க்கை துவங்கினார். எல்லாமே சரியாக சென்று கொண்டு இருந்தது.திருமணம் முடிந்த கையோடு முதலிரவு ஏற்பாடுகளும் விமர்சையாக நடந்திருக்க, ஆயிரம் கனவுகளுடன் முதலிரவு அறையில் அடி எடுத்து வந்தார். ஆனால் ஆந்தை ஒன்று அவரது வாழ்வில் விளையாடி விட்டது. அவரது கனவுகளை சுக்கு நுாறாக கலைத்துபோட்டுவிட்டது.கிளேர், காதல் கணவனை நோக்கி, சென்ற நேரத்தில், தோட்டத்தில் அந்தி நேரத்து ஆந்தை ஒன்று அலறியது. அந்தஅலறலை கேட்டநொடியில் கிளேர் ஓ கொன்னேல், அப்படியே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடோடி வர, மயங்கி விழுந்த அந்த பிரெஞ்சு தேவதை அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. அவரது உடலைவிட்டு உயிர் மறைந்தது.உலகம் முழுவதும் உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டாட்டம் நடந்த 1904ம்ஆண்டு டிசம்பர் 25ம் தேதி தான் இந்த சோக சம்பவம் புதுச்சேரியில் நடந்தேறியது.கண்ணீர் துளிகள் விழ, நெஞ்சில் தீரா சோகத்துடன் அந்த பிரெஞ்சு தேவதை ஊர்வலமாக கொண்டு சென்று உப்பளம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.அவர்அடக்கம்செய்யப்பட்ட உப்பளம் கல்லறையில் பளிங்கு கல்லறை ஒன்று எழுப்பி, அதில் கடல் கடந்து கொண்டு வரப்பட்ட அந்த தேவதை யின் சிலையை ஆந்தையோடு வைத்து, அந்த கல்லறையை காவியமாக்கப்பட்டது.பூக்கும் முன்பே உதிர்ந்த அந்த பிரெஞ்சு தேவை இன்றும் மவுனமாக சோக கீதம் இசைத்து கொண்டிருக்க, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரை காதல் காவிய தேவதையாகவே தரிசிக்க வருகின்றனர். ஆயிரம் மலர்களின் இந்த பிரெஞ்சு தேவதை ஒரு குறிச்சி மலர்.....
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago