உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரும் 27ம் தேதி மாயான கொள்ளை

வரும் 27ம் தேதி மாயான கொள்ளை

நெட்டப்பாக்கம்: செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா வரும் 27 ம் தேதி நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாயானக்கொள்ளை விழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி இரவு 7.00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 27ம் தேதி மதியம் ஒரு மணிக்கு மாயானக் கொள்ளை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !