உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பீர்பாட்டில் குத்து: வாலிபருக்கு வலை

பீர்பாட்டில் குத்து: வாலிபருக்கு வலை

புதுச்சேரி: மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த உறுவையாறு ஆச்சார் யாபுரத்தைச் சேர்ந்தவர் வின்ஸ், 44; சுய தொழில் செய்து வருகிறார். மதுப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் மாலை வில்லியனுார் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் பாரில் மது குடித்தார்.பின், மதுக்கடையில் இருந்து வெளியே வந்தபோது கனுவாப்பேட்டை புதுநகரைச் சேர்ந்த ஜீவா (எ) ஜீவரத்தினம், 32, என்பவர் வின்சை பார்த்து முறைத்தார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜீவா தான் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலால் வின்சை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வின்ஸ் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கப் பதிந்து, ஜீவாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ