மேலும் செய்திகள்
தேசிய தொழுநோய் திட்டத்தில் பயனாளிகளுக்கு உபகரணம்
7 minutes ago
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
7 minutes ago
வாரிசுதாரர்கள் போராட்டம்
8 minutes ago
எல்.ஜே.கே., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
8 minutes ago
வில்லியனுார், : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்ட பவுர்ணமி ஆன்மிக நடைபயணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியுடன் ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆன்மிக நடைபயணம் செல்லுகின்றனர்.அதன்படி நேற்று 28 வது மாத ஆன்மிக நடைபயணத்தை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் சிறப்பு அபிேஷகமும், அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடைபயணத்தில், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர்.ஆன்மிக நடைபயணம் கோவிலில் இருந்து மாட வீதிகளில் வழியாக ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர்ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆற்று மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில் தரிசனத்துடன் உறுவையாறு, கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.
7 minutes ago
7 minutes ago
8 minutes ago
8 minutes ago