உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகம் குடித்த வாலிபர் பலி

அதிகம் குடித்த வாலிபர் பலி

புதுச்சேரி : அதிகமாக குடித்த வாலிபர் பரிதபமாக இறந்தார்.வில்லியனுார் அடுத்த அரசூர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் மோரல் ஸ்தேவன், 38; தனியார் கம்பெனி ஊழியர். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் கடந்த 10 வருடமாக எங்கும் வேலைக்கு செல்லாமல் குடித்து திரிந்து வந்தார். இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு அதிகமாக குடித்த மோரல் ஸ்தேவன் வீட்டில் சுருண்டு கீழே விழுந்தார். உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை